மண்டைக்காட்டில் மீண்டும் ஒரு கலவரத்திற்கு அச்சாரம்..! துணை போகிறது இந்து விரோத திமுக அரசு..!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ளது குன்னங்கோடு கிராமம். இங்கு கேரள முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மன்னர் ஆட்சியின்போது, நெசவுத் தொழிலுக்காக கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் கேரள முதலியார் என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நெசவாளர்க்கான உறுப்பினர் அட்டைகளும் அரசாங்கம் வழங்கும் சில சலுகைகளும் கூட்டுறவு சங்கம் மூலமாக பெற்று வருகின்றனர்.

கூட்டுறவு சங்கம் மூலமாக இவர்களுக்கு கைத்தறி நெசவுக்காக நூற்பாவு ஆற்றுவதற்கென ஓரிடத்தை ஒதுக்கிக் கொடுத்தனர். அந்த இடத்திற்கு வரியும் கட்டி வருகின்றனர்.

இந்த சமுதாய மக்கள் தங்களுக்கென்று “முத்தாரம்மன்” என்ற கோயிலை நூற்பாவு ஆற்றும் இடத்தில் நிறுவி காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழாவும் நடத்திவருகின்றனர்.

இந்தக் கோயிலுக்கு சொந்தமான இடத்தை அதன் அருகே வசிக்கும் சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். மேலும் கோயில் இடத்தை ஆக்கிரமித்து நான்கு சக்கர வாகங்கள் செல்லும் வகையில் பாதையும் புதிதாக ஏற்படுத்தி உள்ளனர்.

இதற்கு ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் பெண்களும், குழந்தைகளும் இருந்துள்ளனர். அவர்களிடம் ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர், வேட்டியை அவிழ்த்து மிக அசிங்கமான நடந்துள்ளார். அதோடு மிகவும் தகாத வார்த்தைகளில் திட்டி, அவமானப் படுத்தி உள்ளார்.

இதனால் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளான பொதுமக்கள், மண்டைக்காடு காவல் நிலையத்திலும், குளச்சல் காவல்துர்றை டிஎஸ்பியிடமும் புகார் அளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் கண்துடைப்புக்காக வந்து கண்டிப்பதுபோல் நாடகம் நடத்திவிட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், 11.9. 2021 அன்று நள்ளிரவில் 40 குண்டர்கள் மற்றும் அடியாட்கள், ஆயுதங்களுடன் வாகனங்களில் கான்கிரீட் கலவையுடன் வந்து சாலை போட்டு அதற்கு ‘காமராஜர் தெரு’ என்று பெயரும் எழுதி வைத்து சென்றுள்ளனர்.

இதற்கிடையே இந்த பிரச்சினை தொடர்பாக ஆர்டிஓ அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், இந்த அப்பாவி கேரள முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 500 பேர் மீதும், பி.சி.ஆர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்போவதாக மிரட்டி உள்ளனர்.

இது அந்த சமுதாய மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிரடியாக தயாராகி வருகின்றனர்.

ஆக்கிரம்பாளரகள் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் ஏன் பி.சி.ஆர். சட்டத்தைச் சொல்லி ஏன் மிரட்டினார்கள்?

மேலும், முத்தாரம்மன் கோயிலை ஆக்கிரமித்துள்ளது உறுதியாக தெரிந்திருந்தும் காவல் துறையினர் இதுவரை எப்.ஐ.ஆர் போடாமல் வாய் பொத்தி, கைகெட்டி நிற்பது ஏன்?

பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் ஒரு மனித மிருகம் வேட்டியை அவித்து காட்டியுள்ளான். அந்த மிருகத்தை போலீசார் இன்னும் ஏன் கைது செய்யவில்லை?

யாருடைய உத்தரவை சிரமேற்கொண்டு இப்படி செயல்படுகிறார்கள்?

இப்படி பல கேள்விகள் நீள்கின்றன.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை.

மண்டைகாட்டில் மீண்டும் ஒரு கலவரத்திற்கு அச்சாரம் போடப்படுகிறது. அதற்கான அனைத்து வேலைகளையும், இந்து விரோத திமுக அரசு கனகச்சிதமாக செய்து வருகிறது.

Exit mobile version