இந்தியா எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்த்து இருந்த பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி, இந்திய மண்ணில் இருந்தபடியே பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா எடுக்கப்போகும் நடவடிக்கையை பாகிஸ்தான் முன்கூட்டியே மோப்பம் பிடித்து விடக்கூடாது என்பதில் பிரதமர் மோடியின் நடவடிக்கை மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் போருக்கு தான் இந்தியா தயாராகிறது என்ற நினைப்பில் இருந்தனர். மேலும் இந்தியா பொருளாதர ரீதியாக தான் பாகிஸ்தானை தாக்கும் என நினைத்திருந்தார்கள்.. இந்த நிலையில் இந்தியாவின் மாபெரும் சர்ஜிக்கல் ஸ்ட்ரிக்கை உலக நாடுகள் எதிர்பார்க்கவில்லை. அனைத்தும் தயார் செய்து விட்டு பாகிஸ்தானை அடித்துவிட்டோம் என உலக நாடுகளுக்கு அதிகாலையில் மெஜேஜ் அனுப்பியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பகல்ஹோட் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு முன்பாக எந்த ஒரு சமிக்ஞையும் காட்டாமல் சத்தமின்றி பாகிஸ்தான் கண்ணில் மண்னை தூவி இந்தியா அதிரடியை நிகழ்த்தியிருக்கிறது. பிரதமர் மோடியும் தனது வழக்கமான பணிகளில் எப்போதும் போல ஈடுபட்டு எந்த நேரத்திலும் பாகிஸ்தான் முன்கூட்டியே அறிந்துவிடக்கூடாது என்பதில் கனக்கச்சிதமாக செயல்பட்டு இருக்கிறார்.
நள்ளிரவில் திடீர் தாக்குதல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதால் நாடே கொதித்து போயிருந்தது. பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி இருக்கும் என்று மோடி சூளுரைத்தார். இதனால், பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சி பாகிஸ்தான் நடுங்கியது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடியான நடவடிக்கையை இந்தியா எடுத்தது. பாகிஸ்தானை ஒருவாரத்திற்கு மேலாக பதற்றமாகவே வைத்து இருந்த இந்தியா, நள்ளிரவில் எதிர்பாராத நேரத்தில், அதிரடி நடவடிக்கையை எடுத்தது. நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவத தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
மிகவும் சீக்ரெட்டாக செய்து முடித்த இந்தியா
இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் தவிடுபொடியாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தானில் ஒரு குடிமக்கள் கூட கொல்லப்படவில்லை எனவும் பயங்கரவாதிகள் மீது மட்டுமே அட்டாக் நடைபெற்று இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. உச்சகட்ட பரபரப்புக்கு இடையே, பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா எடுக்கப்போகும் நடவடிக்கையை பாகிஸ்தான் முன்கூட்டியே மோப்பம் பிடித்து விடக்கூடாது என்பதால் இந்தியா மிகவும் சீக்ரெட் ஆக இந்த விஷயத்தை அணுகியது.
அதிலும் பிரதமர் மோடி வழக்கமான தனது பணியை எப்போதும் போல தொடர்ந்து கொண்டார். இதுதான் மிக முக்கியமான விஷயமாக சொல்லப்படுகிறது. அதாவது, இந்தியா எடுக்கபோகும் இந்த நடவடிக்கை தெரிந்து விடக்கூடாது என்பதால் எந்த பரபரப்பும் இன்றி, கடந்த சில நாட்களை போலவே வரிசையாக நாட்டின் உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளை பார்த்து வந்தார். ஒரே நாளில் இந்த சந்திப்புகள் நடைபெறாமல் ஒவ்வொரு நாளாக நடைபெற்றது.
சர்ஜிக்கல் தாக்குதல்
இதனால், பாகிஸ்தான் கொஞ்சம் அசால்ட் ஆக இருந்தது. இந்த நேரத்தில்தான் இந்தியா திடீரென நள்ளிரவு பயங்கரவாத முகாம்களை அடித்து நொறுக்கியது. பாகிஸ்தானில் கடந்த 2016 ஆம் ஆண்டு சர்ஜிக்கல் தாக்குதலை இந்தியா முன்னெடுத்தது. அதிகாலை நேரத்தில் இந்த சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய நாள் போர் வீரர்களின் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். ஆனால், சர்ஜிக்கல் தாக்குதல் பற்றிய எந்த ஒரு சூசகமான தகவல் கூட கொடுக்கவில்லை.
லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு..
சர்ஜிக்கல் தாக்குதல் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அதாவது, விமானங்கள் புறப்பட தயாராக இருந்த நேரத்தில், டெல்லியில் ஊடக குழுமம் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போதும் இதுபற்றிய எந்த ஒரு கருத்தையும் மோடி பேசவில்லை. அதேபோலத்தான் தற்போது நடந்து இருக்க கூடிய தாக்குதலுக்கு முன்பாகவும் எந்த ஒரு சமிக்ஞையும் காட்டாமல் சத்தமில்லாமல் காரியத்தை சாதித்து இருக்கிறது இந்திய ராணுவம்.
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைகளைத்தான் லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல திரும்புறது என்று சொல்வார்களே அதேபோல எதிராளிகளை அடுத்து என்ன செய்ய போகிறோ என்பதை யூகிக்க முடியாத யுக்தி என்று பாதுகாப்பு நிபுணர்களும், சர்வதேச நோக்கர்களும் கூறுகிறார்கள்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்தது. மொத்தம் 9 பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 80 பேர் வரை பலியாகினர். இதற்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கொக்கரித்து வரும் நிலையில் மீண்டும் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுமா? என்பது பற்றி நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அடுத்த பேட்டியில், ‛‛பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் நமக்கு இல்லை. ஆனால் பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்து சீண்டினால் உரிய பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.அதாவது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இன்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இனி பாகிஸ்தான் அமைதியாக இருக்க வேண்டும். அதையும் மீறி நம் நாட்டுடன் மோதினால் இன்னும் பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு வார்னிங் செய்துள்ளார்
இப்படியான சூழலில் தான் நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. அதேவேளையில் பாகிஸ்தான் தாக்கினால் திரும்பி அடிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் இந்தியா பதற்ற நிலைமையை தணித்தால், இந்தியாவுடனான பதட்டங்களை குறைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் வெள்ளை கொடி காட்டியுள்ளார்.