ஆரோவில்லில், சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆரோவில் அறக்கட்டளை, மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து புதிய வளாகத்தை நிறுவ உள்ளது.

இந்நிலையில், செ ன்னை ஐ.ஐ.டி., உயர்மட்ட பிரதிநிதிகளான இயக்குநர் காமகோடி, பேராசிரியர் ரஜ்னிஷ் குமார், ராபின்சன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ஆரோவில்வந்தனர்.இக்குழுவினரை ஆரோவில் சிறப்பு அதிகாரி சீதாராமன், மூத்த ஆலோசகர் வேணுகோபால் ஆகியோர் வரவேற்றனர்.ஐ.ஐ.டி., குழுவினர், பிரதிநிதிகள் குழுவால் முன்மொழியப்பட்ட சேதராப்பட்டில் நிலத்தை பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர்.

தொடர்ந்து, மாத்ரி மந்திர் சுற்றி மேற்கொள்ளப்படும் லேக் பணி, கிரவுன் சாலை பணிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.இயக்குநர் காமகோடி கூறுகையில், ஐ.ஐ.டி., வளாகமானது பசுமை ஆற்றல் தீர்வுகள், மின் வாகனங்கள், வணிக பயன்பாடுகள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டார்.ஐ.ஐ.டி., வளாகம் செயல்பாட்டுக்கு வரும் போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கத்தை தரும் என்று ஆரோவில் தரப்பில் குறிப்பிட்டனர்

Exit mobile version