இந்து மதம் மீதான விமர்சனம் என்பது அன்று ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி துவங்கி இன்று , முதல்வர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் வரை தொடர்கிறது . அரசியல் மேடைகளிலும் திருமண வீடுகளிலும் எதை பேசினாலும் பேசாவிட்டாலும் சனாதன ஹிந்து மத துஸ்பிரயோகத்தை தொடர்ந்து பேசிவருகிறது திமுக.
80 % ஹிந்துத்துக்கள் திமுகவில் இருக்கிறார்கள் என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின் ஒரு முறையாவது ஹிந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னதுண்டா? என்ற கேள்விக்கு இன்று வரை விடையில்லை.
இந்த நிலையில் தான் தமிழக விளையாட்டு துறை அமைச்சரம் முதல்வர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில், சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தி.க தலைவர் வீரமணி சனாதானமும் இந்து மதமும் ஒன்றுதான் என்று பேசினார். அதை ஒழிக்க வேண்டும் இதன் பின் பேசிய உதயநிதி சனாதானத்தை ஒழிக்க கூடாது அழிக்க வேண்டும் எஎன்று பேசினார். அவரது இந்த பேச்சு ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை உதயநிதிக்கு தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் இந்து திருமணங்களில் நடைபெறும் வைதீக சடங்குகளை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து பேசும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திராவிட சுயமரியாதை இயக்கத் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்டாலின்,பாரம்பரிய இந்து திருமண மந்திரங்கள் மீதான அவநம்பிக்கையை வெளிப்படுத்துவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
ஒரு நிமிடம் மற்றும் நாற்பது வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், இந்து திருமண சடங்குகளை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து பேசுகிறார். திருமணத்தின் போது மணமகனும், மணமகளும் தரையில், சடங்கு நடத்தும் பூசாரி அருகில் எப்படி அமர்ந்திருக்கிறார்கள்.
புனித நெருப்பிலிருந்து வரும் புகை கண்ணீரை உண்டாக்குவது, பூசாரி மந்திரங்களை உச்சரிப்பது காதில் கேட்க முடியாத சொற்கள் என விவரிப்பது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அண்மையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும் என்று பேசினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்து திருமண சடங்குகளை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து பேசிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.