தமிழகத்தில் போலி சமூக நீதி பேசுவதாக கூறியுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன் அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் கொடுக்கப்பட்டு அவர் சார்ந்த சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அவர் சமூகத்தை பா.ஜ.க முன்னேற்றி உள்ளது. தி.மு. க.,வில் இதுபோல் இல்லாமல் சிலரை வளர விடுவதில்லை .
சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினமான இன்று அவரது திரு உருவபடத்திற்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை : பாரத ரத்னா அப்துல்கலாம் அவர்கள் தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர் விஞ்ஞானத்திற்கு பலம் சேர்த்தவர். அவர் இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் ஆவதை தி.மு.க தடுத்துவிட்டது. அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறது.
அதனால் பிரதமருடன், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்தனர். அதற்கு உரிமை உண்டு. ஆனால், உட்கட்சி விவகாரத்தில் தலையீடு செய்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு மேற்கொண்டது திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சி. இந்த விஷயத்தை நீதிமன்றத்தில் எதிர் கொள்வார்கள்.
மீனவர் சட்ட மசோதாவில் குறைகள் இருந்தால் அது குறித்து பாரதிய ஜனதா கவனத்தில் எடுத்துகொள்ளும். மீனவர்கள் கோரிக்கைக்காக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழக ஆளுநர் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை . தமிழக காங்கிரஸ் அரசியல் ரீதியாக இதுபோல் குற்றச்சாட்டுகளை வைக்கிறது. தமிழகத்தில் போலி சமூக நீதி பேசுகின்றனர். இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அவர் சமூகத்தை முன்னேற்றி இருக்கிறோம். ஆனால் தி.மு.க.,வில் இதுபோல் இல்லை. சிலரை வளர விடுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.