உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் ஜிஎஸ்டி சாலையோரம் பயணிகளுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மீது பின்னால் வந்த ஈச்சர் லாரி மோதி விபத்துக்குள்ளானது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் இருந்து 29 பயணிகளுடன் சென்னை சென்ற தனியார் சொகுசு பேருந்து பழுது ஏற்பட்ட நிலையில் சாலையோரம் பேருந்து நிறுத்தி ஓட்டுனர் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர் அப்போது பின்னால் வந்த ஈச்சர் லாரி மோதியதில் தனியா சொகுசு பேருந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் ஓட்டுநர் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்
இந்த விபத்து குறித்து எடைத்தால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
