கடந்த 6 மாதகாலமாக பட்டப்பகலில் கொலை, நடு ரோட்டில் கொலை தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் என கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றது, இந்த நிலையில் திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள பைனான்ஸ் அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. குறிப்பாக சென்னை அமைந்தகரை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பட்டப்பகலில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த ஆறுமுகம்(36) என்பவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையிலேயே இந்த கொடூர கொலை சம்பவம் நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ, பவர் கார்டனை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 31. இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகள் முன் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்தார். நேற்று பெற்றோர் கோவிலுக்கு சென்ற நிலையில் பாலசுப்ரமணியம் தனியாக வீட்டில் இருந்தார். இரவு வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரித்து வருகின்றனர்
திருப்பூர் அடுத்த முதலிபாளையம் சிட்கோ பவர்காடன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (31). ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். திருமணமான இவர் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக பவர் கார்டன் சிட்டியில் உள்ள தனது அப்பா அம்மாவுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பாலசுப்பிரமணியத்தின் பெற்றோர் பழனி அருகே உள்ள கணக்கம்பட்டியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று காலை வீட்டிற்கு திரும்பினார்.
இதையும் படியுங்கள்: பொன்னேரியில் லாரி மோதி மின் ஊழியர் பலி.அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீடு முழுவதும் ரத்த கறை படிந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பாலசுப்பிரமணியம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடல் முழுவதும் கத்திக்குத்து மற்றும் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தது.
இதனைப் பார்த்த பெற்றவர்கள் கதறி அழுதனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.