லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில், சீன தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன் பின் உயர்மட்ட ரீதியிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு சீன வீரர்கள் பின்வாங்கி சென்றார்கள்.
இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த மூக்கையா மலைகளின் முகட்டை இந்தியா கைப்பற்றியது. இந்த சம்பவம் சீனாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நிலைமை இப்படி சென்று கொண்டிருக்க சீனாவை மற்றொரு முறையில் மிரட்டியுளளது இந்தியா சீனாவின் எதிர்ப்பையும் மீறி, தென் சீன கடலில், இந்தியா ஒரு போர்க்கப்பலை நிறுத்தி உள்ளது. மேலும் அந்தமான் நிகோபார் தீவுக்கு அருகிலுள்ள மலாக்கா நீரிணையிலும் இந்திய போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து கவனித்து வருகிறது.
மிக் -29 ரக போர் விமானங்கள் முக்கிய விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதல் பயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். ரூ.1,245 கோடி மதிப்பில், ஆளில்லா வான்வழி கண்காணிப்பு வானகங்களை வாங்கி, 10 கடற்படை கப்பல்களில் நிலைநிறுத்தவும் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது சீனாவிற்கு மிகப்பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. கொரோனாவால் சாதித்து விடலாம் என சைனாவிற்கு மூக்கு உடைந்தது தான் மிச்சம். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா அவ்வப்போது பூச்சாண்டி காட்டி வருகிறது.உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பளமாக பெற்றுள்ளது சீனா. சீனாவால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















