2006-11 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து அவரது சொத்துகளையும் முடக்கியது 2016ம் ஆண்டு வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து, சொத்துகள் முடக்கத்தையும் விழுப்புரம் நீதிமன்றம் நீக்கியது
இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தனித்தனியே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு நேற்று 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது உயர்நீதி மன்றம்
பொன்முடிக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கருத்து கூறி வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், “திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை இதுவரை இலாகா இல்லாத அமைச்சராக தொடரச் செய்துகொண்டுள்ளது திமுக அரசு. இது மிகப்பெரிய அவமானம் என்று கூறியுள்ளார்.
இப்போது இன்னொரு அமைச்சரும் தண்டனை பெற்றுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டு உள்ள அமைச்சர்கள் அனைவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு தான் நடத்துவது நேர்மையான ஆட்சி என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பொன்முடி மீதான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அதனை வேலூருக்கு மாற்ற வேண்டும் என யாரும் மனு போடவில்லை. ஆனால், உயர்நீதிமன்றத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் அந்த வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு மாற்றியுள்ளனர்.
விசாரணை கூட மாவட்ட நீதிபதி ஓய்வு பெறுவதற்கு ஒரு மாத காலத்திற்குள்ளாக விசாரித்து முடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொன்முடி போன்றோருக்கு உதவும் நீதித் துறையில் உள்ள நீதிபதிகள், அலுவலர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், பொன்முடி வழக்கின் தீர்ப்பு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, பொதுவாழ்க்கையில் இருக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தி ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க அமைச்சர் பொன்முடி மேற்கொண்ட முயற்சிகளை குறிப்பிட்டு உயர் நீதிமன்றமே அதிர்ச்சி தெரிவித்தது என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















