திமுக காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் ஆரிசியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் நியமனக் குழு செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், அந்த நியமனக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 24,000 பேரின் பணிகளும் ரத்தானது.
மேற்கு வங்கத்தில் கடந்த 2014 – 2016 வரை நடந்த அரசு ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதாவது, தகுதித் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மெரிட் பட்டியலில் இடம் பெற்றனர். பலர் வெற்று விடைத்தாள்களை, பெயர், முகவரியுடன் சமர்ப்பித்து, உதவி ஆசிரியர்களாக நியமன ஆணைகளை பெற்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஏராளமான புகார் மனுக்கள் குவிந்தன.
மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தில், கூடுதல் நியமனக் குழு முறைகேடாக உருவாக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்களையும், இந்தக் குழு தேர்வு செய்துள்ளதாக வழக்கை விசாரித்த சிபிஐ-யும் குற்றஞ்சாட்டியது. இந்த வழக்கின் மீதான விசாரணைகள் கடந்த மார்ச் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (ஏப்.22) கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அவர் வழங்கிய தீர்ப்பில் 2016ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் ஆசிரியர் பணிக்கு மாநில அரசினால் நடைபெற்ற தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 24,000 ஆசிரியர்களின் தேர்வு சட்ட விரோதமானது என்றும் சட்ட விரோதமாக பணியமர்த்தப்பட்ட 24,000 பேரும் தாங்கள் பெற்ற சம்பளத்தை நான்கு வாரங்களில் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் மாவட்ட நீதிபதி இந்த பணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
உயர்நீதி மன்றம். 23 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட தேர்வின் அனைத்து விடைத்தாள்களையும் மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், இந்த வேலைக்கான உண்மையான திறமையுள்ளவர்களை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மிக பெரும் ஊழல் செய்த மேற்கு வங்காள அரசின் (INDI கூட்டணி) முகத்திரை கிழிந்தது. ஊழல் – ஊழல் – ஊழல். இதுவே INDI கூட்டணியின் தாரகமந்திரம். என பாஜக விமர்ச்சித்துள்ளது.