நாடெங்கும் உள்ள பல்கலை கழகங்கள் , பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் தங்களுக்கு தேவையானவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி அவர்கள் மனம் குளிர இந்த டாக்டர் பட்டம் உதவி புரிகிறது. மேலும் கலைத்துறையில் சாதனைபடைத்த நபர்களுக்கு வருடம் தோறும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறார்கள். திரைத்துறையில் ஏற்கனவ எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன். விக்ரம், விஜய் ஆகியோர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்ககப்பட்டதை தொடர்ந்து தற்போது அந்த வரிசையில் சிம்பு இணைய உள்ளார். சிம்புக்கு வரும் ஜனவரி 11-ந் தேி இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட் உள்ளது.
இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பொது ரசிகர்கள் கடுமயான விமர்சனங்களை கொடுத்து வருகிறன்றனர். அப்படி என்ன சாதித்து விட்டார்கள் திரை துறையினர் எதற்காக இந்த பட்டம் என கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. பல்வேறு துறையில் சிறந்து செயலாற்றியவர்கள் பற்றிய விவரங்களை ஆய்வு செய்யும் குழுவின் பரிந்துரையின் பெயரிலேயே இந்த பட்டம் அவருக்கு வழங்கப்படுகிறது.என வேல்ஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
ஆறு மாத குழந்தையாக திரையில் அறிமுகமான சிம்பு தற்போது 39 வயதை எட்டி பிடித்திருக்கிறார், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், நடிகர் என்று பல்வேறு பரிணாமங்களை கொண்ட சிம்புவுக்கு இந்த விருது வழங்கப்படுவதில் வேல்ஸ் பல்கலைக்கழகம் பெருமை கொள்வதாக அவர் கூறினார்.
சமீபத்தில் வெளியான மாநாடு படம் வெற்றியைத் தொடர்ந்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடிக்கிறார், இதனைத் தொடர்ந்து ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் சிம்பு ஒப்பந்தமாகி இருக்கிறார், இவ்விரு படங்களையும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சிம்புவின் கால்ஷீட்டுக்காக தான் இப்படி ‘டாக்டர்’ பட்டம் கொடுக்கிறார்களோ ? என்ற கேள்வி திரைத்துறையில் எழுந்து இருக்கிறது.