திருந்தமாட்டார் நடிகர் சூர்யா.! கடவுள் லட்சுமி படத்தை இழிவுபடுத்தி இந்து விரோதத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்..! களத்தில் இறங்குகிறது இந்து அமைப்புகள்..!

நடிகர் சூர்யாவும், அவரது மனைவி ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ஜெய் பீம். சமீபத்தில் ஒட்டிடி மூலம் வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவும் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் 1993-ஆம் ஆண்டு, கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஒன்றியம் கம்மாபுரம் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட குறும்பர் சமுதாயத்தை சேர்ந்த ராஜாக்கண்ணுவின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது ஜெய் பீம் திரைப்படம்.

நிஜ சம்பவத்தில் வக்கீலாக பணியாற்றியவர் சந்துரு. இந்த திரைப்படத்திலும் அந்த கதாபாத்திரத்தின் பெயர் சந்துருவாகவே பயன்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்தில்தான் சூர்யா நடித்துள்ளார். அதேபோல கொலை செய்யப்பட்டவர் ராஜாக்கண்ணு. திரைப்படத்திலும் அவரது பெயர் ராஜாக்கண்ணுவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொலையாளி கிறிஸ்தவரான அந்தோணிசாமியின் பெயர் மாற்றப்பட்டு இந்து பெயரான குருமூர்த்தி என்று திணிக்கப்பட்டுள்ளது. அதோடு அவரது வீட்டில் வன்னியர் சமுதாய குறியீடுகளை காலண்டர் மூலம் திட்டமிட்டு வெளிப்படுத்தினார்கள்.

அதாவது பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த ராஜாக்கண்ணுவை, வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து, கொலை செய்து உள்ளார் என்று ரசிகர்களுக்கு காட்டி உள்ளனர். பட்டியிலின சமுதாய மக்களுக்கு வன்னிய சமுதாய மக்கள் எதிரிகள் என்பது போல் சித்தரித்து உள்ளனர்.இது சாதிய மோதலை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது

மேலும் அதோடு நிஜ கதையில் ரியல் ஹீரோவாக இருந்தவர் கோவிந்தன். இந்த கொலை சம்பவத்தை வெளியுலகத்திற்கு எடுத்துக் காட்டியவர் அவர். “இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை, திருமணம் செய்து கொள்ளமாட்டேன்” என்று சபதம் எடுத்துக் கொண்டவர் அவர். அந்த சபதத்தின் படி 2006-ஆம் ஆண்டு ராஜக்கண்ணு கொலைக்கு நீதி கிடைத்த பிறகு, தனது 39-வது வயதில் திருமணம் செய்து கொண்டார் கோவிந்தன்.

அப்படிப்பட்ட கோவிந்தன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராக இருந்தபோதிலும், அவர் வன்னியர் என்கின்ற ஒரே காரணத்திற்காக அவரது கதாபாத்திரத்தை திரைப்படத்தில் முழுமையாக இருட்டடிப்பு செய்துவிட்டு, இந்த வழக்கில் வாதாடிய சந்துருவை மிகப் பெரிய ஹீரோவாக கட்டமைத்து உள்ளார்கள்.

அதேபோல கொலையாளி கிறிஸ்தவரான அந்தோணிசாமியை இந்துவாக மாற்றி அவரது பெயரை வன்னியர் சமுதாயத்தில் மாவீரராக போற்றப்படும் மறைந்த காடுவெட்டி குருவின் பெயரை நினைவுபடுத்துகின்ற வகையில் குருமூர்த்தி என்று திட்டமிட்டு வன்மத்துடன் திணித்து உள்ளனர். ராஜாக்கண்ணு கொலை செய்யப்பட்டபோது, முதனை கிராமத்தில் குறும்பர் சமுதாயத்தை சேர்ந்த 4 குடும்பங்கள் மட்டுமே இருந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறும்பர் சமுதாய மக்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்து அவர்களுக்காக போராடியவர்களில் பெரும்பாலானோர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது அப்பட்டமான உண்மை. பிற சமுதாயத்தை சேர்ந்த ஒரு சிலர் இதில் பங்கெடுத்து உள்ளனர்.

ஆனால் அவை அனைத்தையும் மறைத்துவிட்டு ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயத்தையுமே வில்லன்களாக இந்த படத்தில் வேண்டுமென்றே சித்தரிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் இந்த திட்டமிட்ட செயல் ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயத்தையும் கொந்தளிக்கச் செய்தது. இந்துக்கள் மத்தியிலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் நடிகர் சூர்யாவுக்கு கண்டனங்கள் வலுத்தன. அதோடு இந்த படத்திற்கு திரை விமர்சனம் எழுதிய முதல்வர் ஸ்டாலினுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் வன்னியர் சமுதாய மக்களை சமாதானப்படுத்தும் வகையில், வன்னியர் சமுதாய குறியீடாக காட்டப்பட்ட காலண்டரை மாற்றியுள்ளார் சூர்யா. ஆனால் அந்த காலண்டருக்கு பதிலாக இந்துக்கள் வழிபடும் லட்சுமி படத்தை இப்போது வைத்துள்ளார் அவர். உண்மையான கொலைகாரன் கிறிஸ்தவ அந்தோணிசாமியை இந்து குருமூர்த்தியாக மாற்றியதோடு, அவரை காட்டும்போது வேண்டுமென்றே லட்சுமி படத்தை காட்டி இழிவுபடுத்தியுள்ளார் சூர்யா.

அந்த இடத்தில் உண்மையான கொலையாளியான கிறிஸ்தவ அந்தோணிசாமியின் தெய்வமான மேரிமாதாவை படத்தைதானே வைக்க வேண்டும். அதை ஏன் சூர்யா வைக்கவில்லை? ஏதாவது ஒரு படத்தை அங்கு தொங்கவிட வேண்டும் என்று நினைத்தால், ஈவெரா படத்தையோ அல்லது சி.என்.அண்ணாதுரை படத்தையோ அல்லது கருணாநிதி படத்தையோ தொங்கவிடலாமே. அப்படி தொங்கவிட்டால் இந்து விரோத கும்பல்கள் ஏற்றுக்கொள்வார்களா? முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்விகளை முன்வைக்கின்றனர் ரசிகர்கள்.

இதன் மூலம், சூர்யாவின் இந்து விரோதம், இந்து தெய்வங்களை இழிவுபடுத்துவது போன்ற வக்கிர எண்ணம் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

சூர்யாவின் இந்து விரோதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்து முன்னணியினரும், இந்து அமைப்புகளும் மிகப்பெரிய போராட்டத்தை கையிலெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

=====

Exit mobile version