நடிகர் சூர்யா குடும்பம் அரசியலில் சேரவேண்டும் என்ற நினைப்பில் உள்ளார்கள் ஆனால் அதற்கு திமுகவின் ஆதரவு வேண்டும். சூர்யாவின் தந்தை சிவகுமார் குறித்து சொல்ல தேவையில்லை கலைஞர் ஆட்சிக்கு வந்தால் திமுக பக்கம் ஒரு உருட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தால் அம்மாவுக்கு ஒரு உருட்டு என உருட்டுபவர். வெளியில் தங்களை நல்லவர்களை போல் காட்டி கொண்டு உள்ளுக்குள் விஷத்தை மட்டுமே வைத்திருக்கும் குடும்பம் என்றால் அது சூர்யா குடும்பம் தான்;.
சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கிறேன் என்று வாய்கிழிய பேசும் சூர்யா கருத்து சொல்லும் அளவிற்கு நல்லவரா என்று கேட்டால் இல்லை. வரி கட்டமால் அரசினை ஏமாற்றியவர். தமிழ் தான் உயிர் மூச்சு என்பவர் ஏன் தமிழ் பெண்ணை மனக்கவில்லை. இந்தியை எதிர்க்கும் சூர்யா அவரின் குழந்தைகளுக்கு இந்தி தெரியாதா ? அவரின் தம்பி சமூக போராளி கார்த்தி ஒரு பேட்டியில் என் குழந்தைகள் இந்தியில் பிச்சு உதறுவார்கள் என கூறுவார். அடுத்தவர் வீட்டு பிள்ளைகள் இந்தி படிக்க கூடாது என்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம்
இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்து வெளிந்துள்ள ஜெய் பீம் படத்தில் தென் மாநிலங்களில் இந்தி எதிர்ப்பதாகவும் இந்தி பேசுபவர்களை தாக்குவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது வடமாநிலங்களில் உள்ள தமிழர்களை பாதிக்கும் என்பது சூர்யாவிற்கு தெரியாதா? தைரியமான ஆள் தானே சூர்யா எதற்காக திரையங்குகளில் திரைபடத்தை வெளியிடாமல் OTTயில் வெளியிட்டுள்ளார்.ஒரு வேளை திமுகவின் தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர் தயாரிப்பில் வெளிவரும் அண்ணாத்தே படத்தை பார்த்து பயந்துவிட்டாரோ?
கொரோனா காலகட்டத்தில் மூடியிருந்த திரையரங்குகளால் பல குடும்பங்கள் நடு ரோட்டிற்கு வந்துள்ளது. இப்போது தான் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை வாழ வைக்காமல் தனது குடும்பத்திற்கு பணம் கிடைத்தால் போதும் என தனது தயாரிப்பு படத்தை OTTயில்வெளியிட்டுள்ளார் என்றால் எவ்வளவு கீழ்தரமானவர். இது தான் சூர்யாவின் உண்மை முகம்,
ஜெய் பீம் படத்தில் இதில் தமிழ் பற்றி பேச்சு வேறு இந்தி பேசுபவர்களுக்கு எதிரான தாக்குதலை ஊக்கப்படுத்தும் விதமாகவும் காட்சி அமைத்துள்ளளார். ஆனால் இந்தி டப்பிங்கில் அப்படியே பல்டி அடித்துள்ளர். ஒரு காட்சியில் இந்தி பேசும் ஒருவரை நடிகர் பிரகாஷ்ராஜ் அறைவது போன்ற ஒரு காட்சி அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தின் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் வட இந்தியர் தோற்றத்தில் நடித்திருக்கும் ஒருவரை “தமிழில் பேசு” என்று கன்னத்தில் அறைவது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உண்மையாகவே தமிழ் மீது அக்கறை கொண்டு இருப்பது போல் ரசிகர்களிடம் காட்டிக்கொள்ளும் இந்த திரைப்படத்தின் இந்த காட்சி தெலுங்கு டப்பிங்கில் இந்தி பேசுபவரை “தெலுங்கில் பேசு” என்று கூறுவது போலவும், ஆனால் இந்தியில் மட்டும் “உண்மையைப் பேசு” என்று கூறுவது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த காட்சி தென்னிந்தியாவில் உள்ள இந்தி மொழி பேசுபவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகவும் காலம் காலமாக இந்தி எதிர்ப்பை மட்டுமே காரணம் காட்டி அரசியல் செய்து வரும் தமிழக ஆளும் கட்சி திமுகவுக்கு ஜால்ரா அடிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் நடிகர் சூர்யாவை வச்சு செய்து வருகிறார்கள். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சூர்யா இந்த படத்தின் மூலம் அதிக லாபம் பெற வேண்டும் என்பதற்காக இந்த படத்தை இந்தியிலும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் பல வட இந்திய மாநிலங்களில் பணிபுரிந்து வருகின்றனர். மும்பையின் நாத்தங்காய் போன்ற சில இடங்களில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அங்கு தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட இடங்களில் தமிழர்களும் இந்தி மற்றும் பிற மொழி பேசுபவர்களும் நல்லிணக்கமாக வாழ்ந்து வரும்போது அதை கெடுக்கும் வகையில் இந்த படத்தின் காட்சிகள் அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் இந்தியில் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்தவர்கள் அதிலும் இந்தி பேசுபவரை அறைவது போன்ற காட்சியை வைக்காமல் மாற்றியிருப்பது சூர்யாவின் விஷமத்தனத்தை காட்டுவதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். வசூல் தான் முக்கியம் என்று முடிவு செய்த பின் படத்தில் சமூக நீதிக் கருத்துக்களுக்கு என்ன என்ற விமர்சனம் எழுவதையும் காண முடிகிறது. தமிழில் பேச சொல்லி பிரகாஷ்ராஜ் அந்த காட்சியை கன்னடர்கள் பார்த்தால் அவர் தான் முதல் அறை விழும் என்பது போன்ற நக்கல் விமர்சனங்களும் எழுந்துள்ளன. நடிகர்கள் சூர்யா பிரகாஷ் ராஜ் இருவருமே இந்தி பேசும் பெண்களை திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு விஷயத்தில் முந்தைய ஆட்சியில் போராளியான சூர்யா தற்போதைய ஆட்சியில் கள்ள மௌனம் சாதிப்பதும் குறிப்பிடத்தக்கது.
Source : கதிர்