அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு தகுதி இருக்கா! பங்கம் செய்த அரவிந்த் சாமி.. சமூகவலைத்தளத்தை கலக்கும் வீடியோ…

ARAVIND SAMY

ARAVIND SAMY

எந்த பெண்ணிடமும் உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்டால் யோசிக்காமல் அரவிந்த் சாமி தான் வேணும் என்று சொல்லிவிடுவார்கள். தமிழ் சினிமாவில் ஆண் அழகனாக பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அரவிந்த்சாமி. தமிழ் திரை உலகில் மட்டுமல்ல இந்திய அளவில் பேசப்படும் நடிகர் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்த வருகிறார். தளபதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் அரசியல் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழக அரசியழும் சினிமாவும் இரண்டற கலந்தது. சினிமாவில் இருந்து வந்தவர்கள் தமிழகத்தின் முதல்வராக இருந்துள்ளார்கள். கருணாநிதி,எம்ஜிஆர்,ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், பாக்கியராஜ், கமல், கருணாஸ், நடிகைகள் பொருத்தவரையில் குஷ்பூ, ரோஜா, நமீதா என எண்ணற்ற நபர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்கு களமிறங்கி இருக்கிறார்கள்.ரஜினி மட்டும் அரசியலுக்கு வரேன் வரேன் என கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் தமிழக சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் அரசியலில் களமிறங்கி இருக்கிறார்.மேலும் தமிழக வெற்றி கழகம் என அவர் கட்சி பெயரையும் அறிவித்துள்ளார். தளபதி விஜய் தற்போது நடித்து வரும் கோட் படத்திற்கு பிறகு ஒரு படத்தில் நடித்துவிட்டு ஒட்டுமொத்தமாக மக்கள் பணியில் களமிறங்குவதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தளபதி விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பது பலதரப்பட்ட மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அரசியல் வட்டாரத்திலும் தளபதி விஜயின் புது அரசியல் கட்சி மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ளது.

இந்த நிலையில் நடிகர் அரவிந்த்சாமி ஒரு பேட்டியில்அரசியல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மிக தெளிவாக பதில் அளித்தார், அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் அரவிந்த் சாமி கூறியது. ரஜினி ரசிகன், கமல்ஹாசன் ரசிகன், விஜயை பிடிக்கும் என்கிற காரணத்தினால் ஓட்டு போடக்கூடாது.. நான் ஓட்டு போடக்கூடாது.. ஓட்டு போடவும் மாட்டேன். நடிகர்கள் சொல்லக்கூடிய விஷயங்களினால் சமூகத்தில் மாற்றங்கள் வருமா ?? அவர்களால் அந்த மாற்றத்தை செய்ய முடியுமா ?? அவர்களின் கருத்து மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.. பெரிய நடிகர்தான் ஆனாலும் அரசு திட்டங்களை தீட்டும் அளவிற்கு அவர்களுக்கு தகுதி இருக்கிறதா ? என்பதை எப்படி நம்புவது ??

அரசியலில் களமிறங்கும் நடிகர்களுக்கு நல்ல எண்ணங்கள் இருக்கலாம்.. ஆனால் ஒரு மாநிலத்தை ஆளும் அளவிற்கு அவர்களுக்கு தகுதி இருக்கிறதா ? ஒரு மாநிலத்தை ஆளக்கூடிய அளவிற்கு அவர்களை உயர்த்தி இருக்கிறார்களா ??

அவர்களால் கண்டிப்பாக பண்ணமுடியும்.. பண்ண முடியாது என்பதல்ல.. ஆனால் தலைவராக அவர்களுக்கு கண்டிப்பாக ஏதாவது தெரிந்திருக்க வேண்டுமே !! என அரவிந்த்சாமி அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகப்படியான மக்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களும் பகிர்ந்து வருகிறார்கள். நடிகரின் ரசிகர்களாக இருந்தால் மட்டும் அவருக்கு ஓட்டு போடுவது என்பது சரியாக இருக்காது என்பதே இந்த வீடியோவில் அவர் கூறும் கருத்தாக இருக்கிறது !!

Exit mobile version