அதானி முதலீடுனா இனிக்குது .. கோவையின் வளர்ச்சினா கசக்குதா .. பி.டி.ஆரை சம்பவம் செய்த வானதி சீனிவாசன்

Vanathi Srinivasan

Vanathi Srinivasan

கோவையில் மிகக் குறைந்த அளவிலேயே முதலீடுகள் பெறப்பட்டது தொடர்பான கேள்விக்கு பா.ஜ.க எம்எல்ஏ வானதி சீனிவாசன் முதலீடுகள் என்றால் மட்டும் இனிக்குது.. ஆனால் கோவைக்கு வளர்ச்சித் திட்டம்னு சொன்னால் மட்டும் கசக்குதோ?” முன்னாள் நிதி அமைச்சர் பி.டி.ஆருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில் 6 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழகத்திற்கு வந்தன. ஆனால் இதில் தமிழகம் முழுவதும் கொண்ட முதலீடுகள் அல்ல.. தென் தமிழகம் மேற்கு தமிழகம் முற்றிலும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்திற்கு மிக குறைந்த அளவிலான முதலீடுகளே வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக அரசின் பாரமுகமே என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஏனென்றால் கொங்கு மண்டலத்தில் திமுக கட்சி ரீதியாக வலுவாக இல்லை என்பதால் முற்றிலுமாக கோவையை ஒதுக்கி வருகிறது திமுக.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்திந்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனிடம் இதுதொடர்பாக நிருபர் எழுப்பிய கேள்விக்கு அவர் காரசாரமான பதிலை அளித்தார்.

வானதி சீனிவாசன் அவர்களின் பதில்:

கோவையின் தொழில் வளர்ச்சி என்பது மிக மிக முக்கியமானது. ஏனென்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சி இயந்திரம் எது என்று கேட்டால், நிச்சயமாக சென்னைக்கு அடுத்தப்படியாக அது கோவை தான். அந்த அளவுக்கு தமிழக அரசுக்கு அதிக வருமானம் கொடுக்கக்கூடிய இடமாக கோவை உள்ளது.

ஆனால், கோவையை இந்த அரசு எப்படி வஞ்சிக்கிறது என்று பாருங்க. கோவையில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க நிலம் எடுத்துக் கொடுப்பதில் தமிழக அரசு தாமதம் காட்டுகிறது. தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு உள்கட்டமைப்பு மிக முக்கியம். அப்படி இருக்கும் போது, வேண்டுமென்றே இதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது.

கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற, நிலம் கொடுப்பதற்கு தமிழக அரசு அத்தனை கண்டிஷன்களை போட்டு கொண்டிருக்கிறது. திருச்சி மாதிரியான இடங்களில் கூட இன்றைக்கு பெரிய அளவிலான விமான நிலையம் இருக்கிறது. ஆனால், இவ்வளவு வருமானம் கொடுத்தால் கூட கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு மாநில அரசு தடங்கல் செய்கிறது.

இதுதொடர்பாக சட்டமன்றத்திலேயே அப்போது நிதியமைச்சராக இருந்த பிடிஆரிடம் நான் கேள்வியெழுப்பினேன். அதற்கு பிடிஆர் என்ன சொன்னார் தெரியுமா? கோவை விமான நிலையத்துக்கு நிலம் கொடுப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால், அப்படி கோவை விமான நிலையத்துக்கு நிலம் கொடுத்தால், அதை நீங்கள் அதானி கையில கொடுத்துருவீங்கனு பிடிஆர் சொன்னாரு.

அதானியை பற்றி அவ்வளவு சொன்னீங்கல்ல. இன்னைக்கு நான் உங்களிடம் (தமிழக அரசு) கேக்குறேன். முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானியோட முதலீடுகளுக்காக நீங்க ஏன் போய் நிற்கிறீர்கள் அதானியோட முதலீடுனா மட்டும் உங்களுக்கு இனிக்குது. ஆனால் கோவையின் வளர்ச்சினா மட்டும் உங்களுக்கு கசக்குதா? என வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பினார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version