அதிமுகவும் பாஜகவும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு.

அதிமுகவும் பாஜகவும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்து உள்ளார். அதிமுகவில் உள்ள சிலர் வீர வசனங்கள் பேசி எங்கள் முதுகில்தான் பாஜக சவாரி செய்ய முடியும் என்று பேசினாலும் இன்று அதிமுக ஆட்சியை தொடர்வதற்கும் கட்சி ஒன்றுபட இருப்பதற்கும் வெற்றி நடை போடும் தமிழகமே என்ற சாதனைகளுக்கும் பாஜகவுடன் நட்பே காரணம் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உணரவேண்டும்.

பாமக கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைப்பது தவறில்லை. அதற்காக அவ்வப்பொழது தைலாபுரம் போய் அமைச்சர்கள் பேசுவதும் பிறகு பாமக தலைவர் தேர்தல் கூட்டணி பற்ற பேசவில்லை இட ஒதிக்கீடு 20% வன்னியர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம் அதை அறிவித்தால்தான் கூட்டணி பற்றி பேசமுடியும் என்று தெரிவித்தது அறிக்கை விட்டது அதிமுகவிற்கு ஒரு பின்னடைவே.

பாமக தலைவர் தெளிவான அறிக்கை விட்ட பிறகு எதற்காக அமைச்சர்கள் படை சூழ மீண்டும் தைலாபுரத்திற்கு படை யெடுத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. இது மாதிரி பேச்சுக்கள் அதிமுகவிற்கும் ஏன் பாமகவிற்கு கூட பின்னடைவை ஏற்படுத்தும்.

அதேபோல் தேமுக கட்சியை அதிமுக குறைத்து மதிப்பிடுகிறது. ஒவ்வொரு தேமுதிகவுக்கு ஒவ்வொரு பூத்திலும் செயல்வீரர்கள் என்றால் குறைந்தபட்சம் பத்து பேர் இருப்பார்கள் இவர்கள் அதிமுக மற்றும் திமுகவுக்கு சமமானவர்கள் இவர்களின் தேர்தல் பணி நிச்சயம் அவர்கள் இருக்கும் கூட்டணிக்கு பயன் அளிக்கும். இதை ஏற்கனவே வந்தவாசி இடைத் தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிருப்பித்து காட்டியவர்கள் தேமுதிகவினர். அந்தளவுக்கு தேமுதிகவின் செயல் வீரர்கள் பணி இருக்கும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அவரது தொகுதியில் வன்னியர்கள் அதிகமாக இருப்பதால் பாமகவுடன் இறங்கி போவதும் தேமுதிகவை உதாசனப்படுத்துவதும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இப்படியே போகும் பட்சத்தில் திமுக கூட்டணியில் தேமுதிக கட்சி இணையலாம். பாமகவுடன் கூட்டணியால் பாமக பயன் பெறலாம் ஆனால் அது நிச்சயம் அதிமுகவுக்கு பயன்பெறுமா என்று தெரியவில்லை காரணம் பாமக கட்சியினர் தவிர மீதி இருப்பவர்கள் இன்றும் பாமக தலைமைக்கு கட்டுபட்டவர்கள் அல்ல யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிப்பார்கள் திமுகவினருக்கும் வாக்களிப்பவர்களே.
வெற்றி நடை போடும் தமிழகமே என்றால் அதை நம்பித்தான் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

Exit mobile version