தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதவியேற்றதிலிருந்து தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி வேகமெடுத்துள்ளது. திமுக அமைச்சர் துரைமுருகனே பாஜக அசுர வேகத்தில் வளர்கிறது என கூறியிருந்தார். இளைஞர்களின் நாயகனாக வலம் வருகிறார் அண்ணாமலை.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.இந்த யாத்திரை தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை அண்ணாமலையை நோக்கி நகர்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக இன்று மாபெரும் ஒரு படையை பாஜகவில் இணைத்துள்ளார் அண்ணாமலை. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் உட்பட 18 பேர் பாஜகவில் இணைந்துள்ளார்கள் . டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில்,மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்,மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்,எம்.எல்.ஏ மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.கவில் இணைந்தனர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, கு.வடிவேல், கந்தசாமி உள்ளிட்டோர் 15 எம்.எல்.ஏ க்கள் பாஜகவில் இணைந்தனர்.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. ஏனென்றால் 14 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பாரத பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.பிரதமர் மோடியின் தலைமையில் மேலும் பல கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைப்பதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது.
ஆளும் கட்சியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தான் பாஜகவிற்கு வர போகிறாரம். அனால் கட்சி மாறாமல் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான சாக்கோட்டை அன்பழகன் தான் அது என பேச்சுக்கள் அடிபடுகிறது.
14 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது அதிமுகவிற்கு மிகப்பெரிய இழப்பாக காணப்டுகிறது.அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் தேர்தலில் நிற்க உள்ளது.மேலும் இன்னும் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறுவார்கள் என்ற திகைப்பில் தான் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.
அண்ணாமலையின் அதிரடி அரசியலால் தமிழக திராவிட கட்சிகள் கலக்கமடைந்துள்ளது. ஒருபக்கம் திமுகவின் ஊழல் பட்டியில் ஒருபக்கம் அதிமுகவின் கட்சியை பதம் பார்ப்பது என பாஜகவின் ஆட்டம் தமிழகத்தில் தொடங்கியுள்ளது.
மேலும் தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயண நிறைவு விழா பொதுக் கூட்டம் திருப்பூரில் நடைபெறுகிறது. இந்த நிறைவு விழா பொதுக் கூட்டத்தை பிரமாண்ட முறையில் நடத்த தமிழக பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 530 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்டத்தை நடத்தவும் சுமார் 5 லட்சம் மக்கள் பங்குபெறும் வகையில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். அந்த விழாவில் ஜிகே வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோரை மேடையில் ஏற்ற வேண்டும் என்று அண்ணாமலை அவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்.
அண்ணாமலை இதையும் செய்துகாட்டிவிட்டால் தமிழகத்தில் அசைக்க முடியாத ஆளுமையாக மாறுவர் என்பதில் ஐயமில்லை
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















