அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த பெண் அஜித் !

பிரபல நடிகை மற்றும் பைக் ரேசர் அலிஷா அப்துல்லா தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்பு அக்கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இந்திய பைக் ரேசராக இருப்பவர் அலிஷா அப்துல்லா. இவர், அதர்வா நடித்த இரும்பு குதிரை மற்றும் விஜய் ஆண்டனியின் சைத்தான் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

மேலும், பாரத நாட்டின் முதல் பெண் தேசிய பந்தய சாம்பியன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இதுதவிர, பெண் அஜித் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார். இவர், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று தம்மை அக்கட்சியில் இணைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய கார் மற்றும் பைக் பந்தய சாம்பியன். மனித உரிமைகள், குற்ற எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு தலைவர் அலிசாஅப்துல்லா அம்மையீர் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர் முன்னிலையில் பாஜக இணைந்தார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version