அஜித் தோவலின் ஆப்பரேசன் தப்லீக்.

இந்தியா முழுவதும் கொரானா வேகமாக பரவிவருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது டெல்லி நிஜாமுதீன் நகரில் உள்ள தப்லீக் மர்கஸ் தான் காரணம் என்று தெரிந்த பிறகும் அந்த அமைப்பை சார்ந்தவர்களை கொரானா பரிசோ தனைக்கு உட்படுத்த முடியாமல் திணறிய பொழுது அமிதஷாவின் வேண்டுகோளின் படிகளம் இறங்கினார் அஜித்தோவல்.

அஜித் தோவல் ஒரு அசைன்மெண்டை எடுத்துக் கொண்டால் அது தோல்வியாகுமா? டெல்லி சென்று தப்லீக் ஜமாத்மின்
தலைவர் மௌலானா சாட் கந்த்லாவியை பார்த்து என்ன பேசினாரோ தெரியவில்லை.

நிஜாமுதீன் மர்கஸ் மசூதியில்
இருந்த அனைத்து மத பிரச்சாரகர்களும் கொரானா டெஸ்ட்க்கு ஓடி வந்து விட்டார்கள்.

அப்படி என்ன தான் அஜித் தோவல் கூறினார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

பாருங்கள் இந்தியாவின்
பாதுகாப்பு ஆலோசகரே நேரில் சென்று முஸ்லிம் மத குருவை சந்தித்து பேசினால் அங்குள்ள மசூதியில் தங்கியுள்ள வர்களை கொரானா சோதனைக்கு உட்ப மூத்த முடியும் என்கிற நிலையில் இந்தி யா இருக்கிறது என்றால் அந்த அளவுக்கு இந்த தப்லீக் அமைப்பு ஒர்த்தா என்று
தேடி பார்த்ததை பதிவிடுகிறேன்.

தப்லீக் என்பது என்பதற்கு பொருள் என்ன என்று தேடிப்பார்த்தால் நம்பிக்கை யை வழுப்படுத்த உருவான சமுதாயம் என்பதாக பொருள் காணப்படுகிறது!

பெரும்பாலும் இந்த அமைப்பினர் வெ ள்ளை நிற ஜிப்பாவும் தலையில் தொப்பி யுடனும் காணப்படுவர்.

தங்கள் போதனைகளை மக்களிடத்தில் எடுத்து வைப்பதற்காக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்ததும் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மாதத்தில் 3 நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று குடும்பத்தை மறந்து பயணம் மேற்கொள்வார்கள்!

1926ல் உத்தர பிரதேசத்தில் உள்ள மேவாட் என்ற நகரத்தில் உதயமான இந்த அமைப்பு 1946ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில்கொஞ்சம் கொஞ்சமாக தென் மேற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தலை தூக்கியது பின்னர் காலப்போக்கில் இன்டர்நேசனல் அமைப்பாக உருவெடுத்தது இந்தியாவில்.

இஸ்லாமிய மார்க்கம்
பரவியதில் மிக முக்கியமான பங்கு சூபியிசத்துக்கு தான் உண்டு. முகலாயர்களி ன் வாள்களினால் இந்தியாவில் இஸ்லாம் பரவிக்கொண்டு இருக்கும் பொழுதே சூபியிசம் இந்திய பண்பாட்டின் அடையாளமான குரு சிஷ்ய உறவு மற்றும் இசை மூலம் இறைவனை அடைதலை முன்
வைத்தது.

இதனால் வடக்கு மாநிலங்களில் இஸ்லாம் மிக வேகமாக வளர்ந்து நிறைய அறிஞர்கள் உருவாகினர்.அவர்களில் ஒருவர்
தான் ஹசரத் நிசாமுதீன்.

திருவனந்தபுரம் டூ டெல்லி வரை ஓடுகிற நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் அவருடைய நினைவு தான். நிஜாமுதீன் காலத்தில்
இந்துக்கள் தங்களின் மரபு சார்ந்த வழிபாடு மாதிரி இருக்கிற காரணத்தினால் சூபியிசம் நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.

நிஜாமுதீன்க்கு பிறகு வந்த அவருடைய சிஸ்யர் அமீர் குஸ்ராவ் காலத்தில் சூபியிசம் மிக வேகமாக டெல்லி பகுதியில் பரவியது.இஸ்லாமியர்களை ஒருங்கிணைத்து மத பிரசங்கங்களை. நடத்திட டெல்லியில் ஹர்சத் நிஜாமுதீன் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் நிஜாமுதீன் தர்காவை காட்டினார்கள் சூபிக்கள்.

இப்படி இந்திய பண்பாட்டின் படி கட்டப்பட்ட சூபியிசம் மீது வகாபிச முஸ்லிம்கள் வன்மத்துடனே இருந்தார்கள். இன்னமும்
இருக்கிறார்கள். இப்படி சூபியிசத்தின் மீது வன்மம் கொண்டு இருந்தவர்களில்
ஒருவர் தான் முகம்மது இலியாஸ்.

அவர் மேவாட்டில் 1926 ல் தப்லீக் ஜமாத்அமைப்பை துவங்கி ஓ ..முஸ்லிம்களே! முஸ்லிமாக இருங்கள் என்று பிரசாரம்
ஆரம்பிக்க முஸ்லிம்கள் இவரை திரும்பிபார்க்க ஆரம்பித்தனர்.

எந்த ஒரு மதத்தையும் பாருங்கள். அது பல காலங்களில் ஏதாவது ஒரு புது ஐடியாலஜிஸ்ட் தலைமையில் செயல்பட்டு அவருடைய சிந்தனைகள் மூலமாக புதிய மாற்றங்களை சந்தித்து புதிய வேகத்த்துடன் வளர்ந்து இருக்கும்.

இப்படித்தான் தப்லீக் ஜமாத் அமைப்பும் வளர ஆரம்பித்தது.

இந்த தப்லீக் ஜமாத் இயக்கத்திற்கு ஒரு ரோல் மாடல் இருந்தது. அது தான் தியோபந்த் இயக்கம். என்
னடா பெயரை பார்த்தால் ஏதோ இந்து பெயர் மாதிரி இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா.

உத்தர பிரதேசத்தில் தேவபந்த் என்கிற நகரில் 1866 தாருல் உலூம் என்கிற இ ஸ்லாமிய மதம் சார்ந்த கல்வி நிலையம் ஒன்றை சில உருவாக்கி இஸ்லாமிய ஆட்சி பற்றி மாணவர்களுக்கு இளம் வயதிலேயே போதிக்க ஆரம்பித்தார்கள்.

இப்படி இளம் பருவத்திலேயே இஸ்லா மிய ஆட்சி என்கிற உணர்வுடன் உருவான மாணவ அமைப்பு நாளடைவில தியோ
பந்த் இயக்கமாக மாறியது.

இந்த அமைப்பு முதல் உலகப் போரில் அப்போதைய
துருக்கி அரசான ஒட்டோமன் பேரரசு துணையுடன் ஆப்கானிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இந்தியாவை நாடு கடந்த ஒரு இஸ்லாமிய அரசாக அறிவித்து இருக்கிறார்கள் என்றால் தியோ பந்த் இயக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இப்படிப்பட்ட தியோ பந்த் இயக்கத்தில் இருந்து வந்தவர் தான் முகம்மது இலியாஸ்.அவர் உருவாக்கிய அமைப்பு தான்
தப்லீக் ஜமாத்.புதியதாக ஒன்றை துவக்கினால் அதில் வித்தியாசமாக ஏதாவது இருந்தால் தானே மக்களை கவர முடியும்.

முகம்மது இலியாஸும் இஸ்லாமிய மார்க்க நெறிகளோடு அவருடைய் சொந்த சரக்கு ஒன்றையும் சேர்த்துக் கொண்டார் அதாவது 5 இஸ்லாமிய கோட்பாடுகளோ டு 6 வதாக தாபிர்-ஏ-வக்த் என்கிற கோட்
பாட்டையும் FAZAEL-E-AMAAL அதாவது (அமல்களின் சிறப்பு) என்கிற புனித நூல் ஒன்றையும் உருவாக்கினார்.

அதாவது குரானுக்கு இணையாக ஒரு நூலையும் உருவாக்கி அதனை படித்து அதன் படி நடக்கவேண்டும் என்று அவருக்கு தெரிந்த ஞானங்களை போதனை
களாக்கி அதை பின்பற்றவேண்டும் என்று கட்டளை இட்டார்.

இதை செயல்படுத்த சூபியிசத்தின் அடையாளமாக இருக்கும் ஹசரத் நிஜா முதீன் தர்கா இருக்கும் இடத்திற்கு அருகிலேயே மர்கஸ் ஒன்றை காட்டினார் இலியாஸ்.அது இப்பொழுது மிகப்பெரிய மசூ தியாகி விட்டது. சுமார் 5000 பேர் தங்கும் அளவிற்கு மிகப்பெரிய மசூதி என்பதால் எப்பொழுதும் தப்லீக் அமைப்பினர் இங்கே கூட்டம் கூட்டமாக இருப்பார்கள்.

தப்லீக் ஜமாத்தின முக்கிய கோட்பாடு என்னவென்றால் பணம் சம்பாதிப்பதை குறைத்துக் கொண்டு மத பிரச்சாரத்தில்
ஈடுபட வேண்டும் என்பதே. சும்மா இல்லீங்க இதில் இருப்பவர்கள் 3 அல்லது 4 மாதம் வீட்டிலேயே இருக்க மாட்டார்கள்.

தப்லீக் ஜமாத்தின் கொள்கைகளை பரப்புவது தான் அவர்களுடைய வேலை.பாருங்கள் வெளிநாடுகளில் இருந்து எத்தனை மதபிரசார்கள் டெல்லிக்கு வந்து தப்லீக் ஜமாத்தின் மசூதிக்கு வந்து இருக்கிறார்கள்.

சுமார் 150 நாடுகளில் இந்த தப்லீக் ஜமாத் அமைப்பிற்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

சுமார் 25 கோடி பேர் இந்த தப்லீக்
ஜமாம்தில் இருக்கிறார்கள். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முகம்மது ரபீக் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாப் செரிப்
பங்களா தேசின் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மான்.

கிரிக்கெட் ப்ளேயர்ஸ் இன்சமாம் உல் ஹ க் ஷாகித் அப்ரிடி சையத் அன்வர் சலீம்மாலிக் என்று ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.

அதனால் ஒவ்வொரு வருசமும் ஒவ் வொரு நாட்டில் மாநாடு போட்டு மதம் வளர்த்து கொண்டு இருப்பார்கள்.

இந்த தடவை இந்தியாவோட கெட்ட நேரம் டெல்லியாக இருந்ததால் பல நாடுகளில் இருந்து வந்து இந்தியாவுக்கு கொரானாவை பரப்பி விட்டார்கள்.

நாடு முழுவதும் கொரானாவை பரப்பி விட்டீர்களே வாருங்கள். உங்களுக்கும் டெஸ்ட் எடுக்க
வேண்டும் என்று டெல்லி கமிசனர் அழைத்தும் வர முடியாது என்று கூறிவிட்டார்கள்.

கடைசியில் அஜித் தோவல் போய் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு கொரானா டெஸ்டுக்கு உடன் படவைத்து இருக்கிறார்.

அஜித் தோவலின்வேலை
அதோடு முடியவில்லை. மர்கஸ் மசூதி யை மூடுவதோடு தப்லீக் ஜமாத்தை முடக்கும் அதிரடி ஆப்பரேசனையும் ஆரம்பித்து விட்டார்.

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version