தவெகவில் இருப்பவர்கள் அனைவரும் குழந்தைகள் தான்!! மொத்தமா முடிச்சுவிட்ட அண்ணாமலை..

Annamalai 2024

Annamalai 2024

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் விவகாரம் தொடர்பாக செருப்பை கழட்டி வைத்து, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு 48 நாள் விரதத்தை துவங்கினார். இந்நிலையில் 48 நாட்கள் விரதம் நிறைவு செய்யும் வகையில் பழனி கோவிலுக்கு காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். காவடி சுமந்தபடி திரு ஆவினன்குடி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு தொடர்ந்து, அடிவாரம் பாத விநாயகர் கோவில் படிவழிப் பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த டிஎஸ்பி நமச்சிவாயம் என்பவர் அண்ணாமலையை தடுத்து நிறுத்தினார். அப்போது காவடியுடன் மலைக்கோவிலுக்கு மேலே செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் படிவழிப் பாதை வழியே பக்தர்கள் இறங்கி வரும் வழி என்பதால் குடமுழுக்கு நினைவரங்கம் வழியே மேலே செல்லுமாறு தெரிவித்தார். அப்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் வழியில் எப்படி செல்வது? என்று கேள்வி எழுப்பினார். அப்போது டிஎஸ்பி மற்றும் பாஜகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து படிவழி பாதையில் அண்ணாமலை உடன் 5 பேர் மட்டும் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து படிப்பாதை வழியே அண்ணாமலை மலைக்கோவிலுக்கு மேலே சென்றார். தொடர்ந்து அறுபடை வீடுகளுக்கும் சென்று அண்ணாமலைஸவழிபாடு நடத்தவுள்ளார். சாமி தரிசனம் செய்துவிட்டு அடிவாரம் வந்த பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தைப்பூசத்திற்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து சொல்வது ஒன்றும் பெரியதல்ல என்றும், வாழ்த்து தெரிவித்தது சந்தோசம்தான் என்றாலும், லட்சக்கணக்கான பக்தர்கள் கடுமையாக விரதமிருந்து வெகுதூரம் பாதயாத்திரையாக நடந்து வந்து முருகனை வழிபடுகின்றனர். அவர்களுக்கு நடைபாதை, கழிவறை உள்ளிட்ட எவ்வித உதவியும் செய்யவில்லை என்றும், எனவே பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் பிரான்சில் இருந்து கொண்டு பாரத பிரதமர் மோடி தைப்பூச வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் வாழ்த்து சொல்லவில்லை என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், வாழ்த்து சொல்வதும் சொல்லாததும் பெரிதல்ல.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோர் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி கவலை இல்லை, தாங்கள் மக்களை சந்தித்து அவர்களது பிரச்சனையை தீர்க்கும் வகையில் அரசியல் செய்கிறோம். ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்பவர்கள் தான் வியூக நிபுணர்களை அழைத்து அரசியல் செய்தால் மக்கள் பதில் சொல்வார்கள் என்றும் தெரிவித்தார். அவர்களுக்கு ஏழை மக்களின் பசி தெரியாது என்றும் தெரிவித்தார். அதிமுக உட்கட்சி பூசல் குறித்து தான் எதுவும் பேச விருப்பமில்லை என்றும் தெரிவித்தார்.

சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி அளிக்கவில்லை என்று அன்பில்மகேஷ் கூறியது பச்சைபொய் என்றும், கல்விக்கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, நிரந்தர பணி நியமனம், செவிலியர் பணி நியமனம் என கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் சிறப்பாக அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version