சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் இராணுவ வீரர்களின் தியாகத்தை வெளிப்படுத்துகிறது. அந்த திரைப்படத்தை பார்த்த ஒவ்வொருவரின் நெஞ்சத்திலும் தேசபக்தி உணர்வை ஏற்படுத்துகிறது. தன்னலமற்ற மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வீரமிக்க தியாக வாழ்க்கையை பார்த்து கண்ணீர் சிந்தாதவர்களே இல்லை. அந்த வகயில் ஏராளமான ஆன்மீக மற்றும் தேசபக்தி திரைபடங்கள் வெளிவந்து கொண்டிருந்த தமிழக திரைத்துறையில் சில பத்தாண்டுகளாக தொடர்ந்து இன, மொழி, பிராந்திய, வெறுப்பு திரைப்படங்கள் மற்றும் பிரிவினைவாதத்தை முன்னிறுத்தும் தேச விரோத திரைப்படங்கள் அதிகரித்துவிட்ட நிலையில், நம் நாட்டு ராணுவ வீரர்களின் தியாகத்தையும் தேச பக்தியையும் எடுத்துக்காட்டும் வகையில் அமரன் திரைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகம் நல்ல மாற்றத்தை அடைந்து சரியான பாதைக்கு திரும்பியுள்ளதை எடுத்துகாட்டுகிறது. அந்த வகையில் அமரன் திரைப்பட குழுவிற்கும் தமிழ் திரைத்துறைக்கும் பாராட்டுக்கள். அதே நேரத்தில் நேற்று (08/11/2024) தமிழகத்தில் சில இடங்களில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முன்னிறுத்தும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இஸ்லாமியர்கள் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்,
அந்த திரைப்படம் திரையிடபடும் திரையரங்கத்தை முற்றுகையிட்டுள்ளனர். அதேபோல் பிராந்திய மொழி பிரிவினைவாதத்தை முன்னிறுத்தும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் அமரன் திரைப்படத்திற்கு எதிராகவும் பேசியதுடன் கஷ்மீர் பிரிவினைவாத பயங்கரவாதிகளை போராளிகள் தியாகிகள் என்ற கருத்து திரிப்பை வாசித்துள்ளார்.
இவ்வாறான செயல்கள் மக்களை திசைதிருப்பி பிரிவினைவாதத்தை ஊட்டும் திட்டமிட்ட சதிச்செயல்கள் என்பதை தமிழக காவல்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் பயங்கரவாதம் பிரிவினைவாதம் தலைதூக்கியே வந்துள்ளது என்பதற்கு இந்த சம்பவங்களும் சான்றாகும்.
தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் பேரணி முதலானவற்றிற்கு அனுமதி மறுத்து கைது செய்து ஜனநாயக குரல்வளையை நசுக்கும் தமிழக அரசானதா எஸ்.டி.பி.ஐ. அமைப்பு மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திரையரங்கை முற்றுகையிடவும் அனுமதி அளித்து விட்டு பின்னர் கைது நாடகம் நடத்தியுள்ளது வெட்ககேடானது. தேசியம் தேசபக்தி மற்றும் கஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத்தை எடுத்துகாட்டும் திரைப்படங்களை முடக்கிடவும் தமிழக திரைத்துறையில் பிரிவினைவாத ஆதிக்கத்தை நிலைநாட்டவும் தமிழகத்தில் மட்டும் இதுபோன்ற செயல்களில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் ஈடுபடுகின்றன என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு பின்னணியில் தமிழகத்தின் ஆளும்கட்சி ஆதரவு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. கோயமுத்தூர் கோட்டை மேடு ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலை திமுக அரசு எப்படி மழுப்பியது என்பதை யாரும் மறக்க முடியாது.
நம்நாட்டின் வேறு எந்த பகுதியிலும் நடக்காத போராட்டங்கள் இங்கு மட்டும் இஸ்லாமிய அமைப்புகள் ஏன் நடத்துகின்றன. அந்த வகையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வக்ஃப் வாரிய மசோதாவிற்கு எதிராக சில இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக செய்திகள் மூலம் அறியமுடிகிறது. இதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாக்க இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களும் பிரிவினைவாத அமைப்புகளும் சதிச்செயலில் ஈடுபடுகிறதோ என்ற கேள்வியும் எழுகிறது
. தமிழகத்தில் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை (NIA) நடத்தும் சோதனைகள் பயங்கரவாத இயக்கங்களும் பயங்கரவாதிகளும் எந்த அளவுக்கு பரவலாக ஊடுறுவி பலமடைந்துள்ளார்கள் என்பதை எடுத்துகாட்டுகிறது. எனவே இதுபோன்ற சமூக விரோத, தேச விரோத செயல்களுக்கு ஆதரவு தருவோரை இரும்புக்கரம் கொண்டு ஆரம்ப நிலையிலேயே ஒடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.