கமலின் அரசியலை முடிப்பதற்காக விடாது துரத்தி வருகிறது பிக்பாஸ் 7. மையம் என்று கட்சியின் பெயரை வைத்து கொண்டு அரசியலில் மையம் இல்லை,சரி 2023 – 2024 ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 07 நிகழ்ச்சியில் தொடர்ந்து 7-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். மைய அரசியல்வாதி கமலஹாசன். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக கமல் ஹாசனின் அரசியல் பயணம் முற்றிலுமாக முடித்து வைக்கப்படும் என சொல்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் நடித்து வரும் கமலஹாசன் ஏறத்தாழ 235 திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரம் எடுத்துள்ள கமல் அரசியலிலும் நடிக்க தொடங்கினார்.டார்ச் லைட் அடித்து தமிழகத்திற்கு ஒளி தரப்போகிறேன் என கிளம்பினார் கமலஹாசன். ஆனால் அந்த டார்ச் லைட்டால் கோயம்புத்தூரை கூட வெல்ல முடியவில்லை. ஆரம்ப காலத்தில் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்ட ‘மக்கள் நீதி மையம்’ தற்போது எந்த ஒரு அறிவிப்பும் விளம்பரங்களும் டார்ச் லைட் வெளிச்சம் கூட இல்லாமல் இருந்து வருகிறது., இனி வரும் அரசியலில் தனது திறனை வெளிக்காட்ட முயற்சித்து வருகிறார். அதற்கான முயற்சிதான் பிக்பாஸ்.
கொஞ்ச நாள் அரசியலை ஒதுக்கிவிட்டு நடிக்க சென்றார். ஏனென்றால் திமுக ஆட்சி வந்தது அந்த சமயத்தில் தமிழகத்தில் விடியல் ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பிரகாச ஒளி வீசியது. வேங்கைவயல் சம்பவம், ஊழல், பட்டியிலன மக்களுக்கு எதிரான சம்பவங்கள், போதை கலாச்சாரம், நடுரோட்டில் கொலைகள்,சென்னை வெள்ளம் ,தென்தமிழகம் நீரால் மூழ்கியது அமைச்சர்கள் கைது, 1000 ரூபாயில் கை வைத்தது என விடியல் ஒளி வீச தொடங்கியதால் விக்ரம் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் டார்ச் லைட் நாயகன்.
அடுத்த படம் நடிப்பதற்கு ஒரு இடைவெளியில். 2023 – 2024 ஆம் ஆண்டில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி மையமாக நின்று டார்ச் லைட் அடிக்க சென்றார் கமலஹாசன். விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து 7வது முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டு வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஆரம்ப காலத்தில் இருந்து ‘கமல் ஹாசன் தொகுத்து வருகிறார்.
சரி விசத்யத்திற்கு வருவோம் தமிழ் சினிமாவில் நடிகை, பின்னணி பாடகி என பணியாற்றி வரும் பிரபலம். இவர் 2023 – 2024 ஆம் ஆண்டில் நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று பலர் மத்தியில் பிரபலமாகியுள்ளார். துருவ நட்சத்திரம், விக்ரம் என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் தற்போது தமிழ் சினிமாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரால் அறியப்படுகிறார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ‘புல்லி கேங்’ என ஒரு கேங் அமைத்து பிக்பாஸ் இல்லத்தில் ஒரு அணியாக தந்திரங்களை வெளிப்படுத்தி பயணித்து வருகின்றனர். இந்த குழுவில் மாயா, பூர்ணிமா, ஜோவிகா, அக்ஷ்யா, விக்ரம், என பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பயணித்து வவந்தார்கள்.
இந்த குழுவானது எந்த ஒரு முடிவையும் சொல்லி தங்களின் கேம்-யை தங்களின் விருப்பத்திற்கேற்ப கையாண்டு வருகின்றனர். இந்த குழுவில் ஒவ்வொருவராக விலகி தற்போது மாயா பிக்பாஸ் இல்லத்தில் இருக்கிறார்.பிக்பாஸ் இல்லத்தின் போட்டியாளர் மாயா எஸ் கிருஷ்ணன், உலக நாயகன் கமல் ஹாசன் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
விக்ரம் படத்தில் நடித்த மாயா மற்றும் கமல் ஒரு நல்ல அறிமுகத்தில் உள்ளனர். இருவரின் திரைப்பயத்தில் விக்ரம் திரைப்படம் இரு முக்கிய படமாக அமைந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசன் மற்றும் போட்டியாளராக இருக்கும் மாயா எஸ் கிருஷ்ணன் இருவரையும் சேர்த்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மாயாவின் தவறுகளை கமல் ஹாசன் கண்டுகொள்ளாமல் இருப்பதே காரணம் என பலரும்தங்களின் கருத்துக்களை கூறிவருகின்றனர். ஒரு குழுவின் உதவில் மாயா செய்து வரும் செயல்கள் எந்த விதத்திலும் கமல் தரப்பில் தவறுதலாக இல்லையா என பல நெட்டிசன்கள் மற்றும் பிக்பாஸ் ரசிகர்கள் தங்களின் ஆதாரங்களை சமூக வலைத்தளத்தில் பேசியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் கமல் ஹாசன் ஒரு சாதாரண நிகழ்ச்சியில் பாகுபாடுவுடன் இருப்பதை கண்ட பலர் சமூக வலைத்தளம் மற்றும் பல இடங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கமல் ஹாசனின் இந்த ஒரு தலை பட்சம் பல ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி ஒரு அரசியல் தலைவராக நினைக்கும் கமல் இப்படி செய்யலாமா என விமர்சனம் செய்துள்ளனர். மேலும் இணையத்தில் கமல் ஹாசன் – மாயா இருவரையும் இணைந்து பல மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்கள் வெளியாகி வருகிறது. இதனால் கமல் ஹாசனின் அரசியல் கனவுக்கும் ஆப்பு ஆகியுள்ளது.