அம்பேத்கர் சிலையை உடைத்த விசிகவினர்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் கொரோனா நோய் தொற்று பரவும் வகையில் கூட்டம் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த மாதம் ஓமலூர் அருகே அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களே அந்த சிலையை உடைத்ததாக சொல்லப்படும் நிலையில், இதற்காக அந்த கட்சியை சேர்ந்த 5 பேரை போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.இதனையடுத்து சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று, ஓமலூரில் நேற்று விடுதலை சிறுத்தை கட்சி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விசிக கட்சியினரே அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தி இவர்களே போராட்டத்தில் ஈடுபடுவது நகைப்புக்குரியது.

இந்த ஆர்ப்பாட்டத்தால் நோய் பரவல் சூழும் ஏற்பட்டதாக கூறி விடுதலை சிறுத்தை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

source Hindu sakthi news

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version