அமெரிக்க டைம்ஸ் சதுக்கத்தில் ஓளிர்ந்த பாரத திருநாட்டின் அடையாளம்.

நேற்று அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயிலாக்கான பூமி பூஜை பல நாடுகளில் ஒளிபரப்பானது என்றாலும் உலகின் புகழ்பெற்ற அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில்
ஒளி பரப்பானதை பார்த்து அமெரிக்க மக்கள் மட்டுமல்ல உலக மக்கள் அனை வரும் இந்தியாவின் அடையாளம் எதுவென்பதை அறிந்து இருப்பார்கள்.

நியூயார்க்கின் அடையாளம் எது வென்றால் மன்ஹட்டன் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்க கட்டிடம் தான். இங்குள்ள புகழ் பெற்ற நிறுனங்கள் ஷாப்பிங் சென்டர்கள் என்று எப்பொழுதும் டைம்ஸ் சதுக்கம் கூட்டமாக இருக்கும்.

உலகின் மிக முக்கிய டூலிஸ்ட் ஸ்பாட் என்றால் நியூயார்க் நகரில் உள்ள இந்த டைம்ஸ் சதுக்கம் தான். 110 மாடிகளை உடைய இந்த டைம்ஸ் ஸ்கொயர் கட்டிடத்தில் ஆபிஸ் போட்டு வெட்டியா வாடகை அளித்து சும்மா பேருக்கு நான்கு ஆட்களை வைத்து ஆபிஸ் டைம்ஸ் சதுக்கத்தில் இருக்கிறது என்று பந்தா காட்டுவது தான் பல கோடீஸ்வரர்களின் ஹாபி.

ஏனென்றால் அங்கு தினமும் வரும் சுற்றிறுலா பயணிகளின் எண்ணிக்கையே சராசரியாக 4 லட்சத்தை தாண்டி நிற்கும்
என்றால் டைம்ஸ் ஸ்கொயரின் பெருமையை அறிந்து கொள்ளலாம்.

சுமார் 120 ஆண்டுகள் வரலாறு கொண்ட டைம்ஸ் ஸ்கொயரை பார்த்து தான் உலகின் பல
நகரங்களில் வானளாவிய கட்டிடங்கள் உருவாகின.

நம்முடைய சென்னை எல்ஐசி பில்டிங் கூட இந்த டைம்ஸ் ஸ்கொயரை பார்த்து
அப்போதைய 1953 களில் அப்போது பல இன்சூரன்ஸ் நிறுவனங்களை வைத்து
இருந்த எம்ஏ சிதம்பரம் செட்டியார் கட்டியது தான்.சில ஆண்டுகளாக இந்தியாவின் மிகஉயரமான பில்டிங் என்கிற அடையாளத்தை வைத்து இருந்தது சென்னை எல்ஐசி பில்டிங்.

முன்பெல்லாம் சென்னைக்கு செல்பவர்க ள் தேடிப்போய் நிற்பது எல்ஐசி பில்டிங்ங் வாசலில் தான். அந்த அளவிற்கு அந்த 14 மாடிக்கட்டிடம் தனித்து நின்று சென்னையின் அடையாளத்தை தாங்கி நின்றது எல்ஐசி பில்டிங்.


வருத்தம் என்னவென்றால் இந்த பில்டிங் கட்டி முடிக்கப்படுவதற்குள் இன்ஸூரன்ஸ் நிறுவனங்கள் அரசு உடைமையாக்கப்பட்டதால் எல்ஐசி பில்டிங்கும் அரசு வசமானது.

பாவம்ல செட்டியார்..

கடைசியில் டைம்ஸ் ஸ்கொயர் மாதிரி தன்னுனைய பேர் சொல்லும் பில்டிங் கட்ட முதல் போட்ட முதலாளி சிதம்பரம் செட்டியார் கடைசியில் மவுண்ட் ரோட்டில் நின்று தன் கண்ணுக்கு முன்னால் உயர்ந்து நிற்கும் எல்ஐசி பில்டிங்கை கண்ணீருடன் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

உள்ளே நுழைய முடியவில்லை.

சிதம்பரம் செட்டியார் கதையை கேட்டவுடன் எனக்குள் சிறிய வயதிலேயே அந்த எல்ஐசி பில்டிங்க்குள் நுழைந்து சுற்றி
பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

நான் சென்னையில் வேலை பார்க்கும் பொழுது அங்கு சர்வீஸ்க்கு செல்லும் வாய்ப்புகள் கிடைத்தது.

அப்பொழுது லிப்டில் செல்லாது படிக்கட்டுகளில் ஓடி 14 மாடிக்கு சென்று மூச்சிறைக்க மவுண்ட் ரோட்டில் சிறுபுள்ளிகளாக ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்து இருந்தேன்.

அதன் மொட்டை மாடியில் நின்று கீழே செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்ப்பது செம திரில்லிங்காக இருக்கும்
அப்பொழுதெல்லாம் சிதம்பரம் செட்டியாரைத்தான் நினைத்து கொள்வேன்.

எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் ஒரு நாள் கீழே வந்து தான் ஆக வேண்டும். கடவுளி ன் ஆசி இருந்தால் மட்டுமே மீண்டும் எழுந்து நிற்க முடியும் . இது தான் மனித வாழ்வில் எழுதி வைக்கப்பட்ட விதி.


அந்த கடவுளின் ஆசிகளினால் காங்கி ரஸ் ஆட்சியில் கீழே விழுந்து கிடந்த இந்தியாவின் அடையாளம் இப்பொழுது மோடி ஆட்சியில் விண்ணை முட்டி நிற்கும் டைம்ஸ் ஸ்கொயர் பில்டிங்கில் தொடர்ந்து 12 மணி நேரம் ஒளிர்ந்து கொண்டு இருப்பதை பார்க்கும் பொழுது இதை கொண்டு செல்ல மோடி எவ்வளவு உழைத்து இருப்பார் என்று நினைத்து பாருங்கள்.

கட்டுரை:- விஜயகுமார் அருணகிரி வலதுசாரி எழுத்தாளர்.

Exit mobile version