ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் அண்ணாமலை சொன்ன விஷயம் களத்தில் இறங்கிய அமித்ஷா!

Amitsha,

Amitsha,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி திருவேங்கடம், காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். கொலையில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திருவேங்கடத்தை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது இந்த என்கவுன்டர் நடந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கின் முக்கிய குற்றவாளி “திருவேங்கடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற அவர் தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டபோது திருவேங்கடம் தப்பிப்பதற்காக காவல்துறையினரை தாக்கிவிட்டு ஓட முற்பட்டபோது தற்காப்புக்காக காவல்துறை சுட்டுள்ளார்கள் இந்த துப்பாக்கி சூட்டில் திருவேங்கடம் உயிரிழந்ததாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் . ஆம்ஸ்ட்ராங் கொலையான பத்தே நாட்களில் அந்த வழக்கில் கைதான திருவேங்கடம் போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலையை சி.பி.ஐ விசாரணைக்கு விட வேண்டும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தேசிய தலைவர் மாயாவதி முதல் தமிழக பா.ஜ.க வரை முக்கிய எதிர்க்கட்சிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். மேலும் தமிழ்நாட்டில் தலித் சமூகத்தினருக்கு எதிரான தொடர் வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழக பாஜக துணை தலைவர் வி.பி துரைசாமி தலைமையிலான பிரதிநிதிகள் குழு, தேசிய பட்டியல் ஆணையத் தலைவர் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரை சந்தித்து மனு கொடுத்தளர். இந்த மனுவில், தமிழகத்தில் தலித் சமூகத்திற்கு எதிராக இதுவரை நடைபெற்ற 25 வழக்குகள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுமட்டுமில்லாமல் ஆம்ஸ்டராங் கொலை வழக்குகுறித்து அமித் ஷாவுக்கு சி.பி.ஐ விசாரணை கோரி அண்ணாமலை கடிதம் அனுப்பினார்.இதனை தொடர்ந்து ஆம்ஸ்டராங் கொலைவழக்கில் சம்மந்தப்பட்ட திருவேங்கடத்தை காவல்துறை என்கவுண்டர் செய்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுளது.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது கூறியிருந்தார்.

மேலும் கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பட்டியலின மக்களுக்கு எதிராக 2000-க்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவின்றன.கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவா்களில் 50-க்கும் மேற்பட்டோா் பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா்கள். வேங்கைவயலில் குடிநீா் தொட்டியில் மலத்தை கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் இதுவரை கண்டறியப்படவில்லை என அடுக்கடுக்கான புகார்கள் டெல்லியிடம் தமிழக பாஜக கூறியுள்ளது.

தமிழக பாஜக அளித்த புகாரிகளின் அடிப்படையியல் தமிழக உள்துறை செயலரிடம் விளக்கம் கேட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிதம் அனுப்பி உள்ளார்.இதை சற்றும் எதிர்பாராத ஆளும் திமுக அரசு சி.பி.ஐ உள்ளே வருவதற்குள் சில முக்கிய வழக்குகளை முடித்துவிட வேண்டும் என தமிழக காவல்துறயினருக்கு மறைமுக உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. அமித்ஷாவின் நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளது தமிழகம் .

Exit mobile version