குஜராத்தில் 188 இந்து அகதிகளுக்கு குடியுரிமை சான்றிதழ்களை வழங்கிய பின்னர் அகமதாபாத்தில் உரையாற்றிய அமித்ஷா, குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) லட்சக்கணக்கான அகதிகளுக்கு உரிமைகளையும் நீதியையும் வழங்குவதாகும் என்றும் குடியுரிமை வழங்குவது தொடர்பாக யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கு சி.ஏ.ஏ.வில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும் அவர் முஸ்லிம்களுக்கு உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த அரசாங்கங்கள் கோடிக்கணக்கான ஊடுருவல்காரர்களை நாட்டிற்குள் அனுமதித்து சட்டவிரோதமான முறையில் குடிமக்களாக ஆக்கி உள்ளன. அதே நேரத்தில், சட்டத்தை சரியாகப் பின்பற்றி குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சட்டத்தில் அதற்கான இடமில்லை என்று குடியுரிமை வழங்க மறுத்துவிட்டனர்.
.
ஏனெனில், கடந்தகால காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி ஆட்சிகளில் அவர்களின் கொள்கைகளால், நாட்டிற்கு அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு உரிமைகளும், நீதியும் கிடைக்கவில்லை. வங்காள தேச பிரிவினையின் போது 27 சதவீத இந்துக்கள் இருந்தனர், ஆனால் இன்று அவர்கள் கட்டாய மத மாற்றத்திற்கு ஆளானதால் அவர்கள் வெறும் 9 சதவீதமாக உள்ளனர்” என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















