மதுரையில், போலி ஆவணங்கள் வாயிலாக நுாற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் வினியோகிக்கப்பட்ட விவகாரம், தி.மு.க., – அ.தி.மு.க.,வுக்கு புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது.
இது குறித்து என்.ஐ.ஏ., விசாரணைக்குமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, மதுரை அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, போலி ஆவணங்கள் வாயிலாக நுாற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் வினியோகிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, ஆளும் தி.மு.க., அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக கவர்னர் ரவிக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:மதுரை அவனியாபுரத்தில் போலி ஆவணங்கள் வாயிலாக 200க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட காலகட்டத்தில், மதுரை போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசிர்வாதம் பதவியில் இருந்தார். கமிஷனரின் தலையீடு இல்லாமல் போலி ஆவணங்களுக்கு பாஸ்போர்ட் வழங்க முடியாது. இதன் வாயிலாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.மதுரை கமிஷனராக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம், இப்போது உளவுப்பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக உள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் டேவிட்சன் பெயர் சேர்க்கப்பட்டது.இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்புமாறு தமிழக உள்துறை செயலரிடம் இருந்து டேவிட்சனுக்கு கடிதம் அனுப்பப்பட்டதோடு, இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும்ஏற்படவில்லை.டேவிட்சனின் திட்ட மிட்ட தாமதத்தால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு இருக்கலாம்.எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.3.
மேலும், கவர்னர் ரவியை வரும் 21ல் நேரில் சந்தித்து புகார் அளிக்கவும் அண்ணாமலை திட்டமிட்டு உள்ளார்.இந்த விவகாரம், ஆளும் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்க உள்ள நிலையில், இந்த விவகாரம் சபையில் அனலை ஏற்படுத்தக்கூடும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருதுவதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
எனவே, கவர்னர் ரவியை, 21ல் அண்ணாமலை சந்தித்து புகார் மனு அளித்த பின், பாஸ்போர்ட் விவகாரத்தை என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்க அமித் ஷா முடிவு செய்துள்ளதாக உள்துறை வட்டாரங்கள்தெரிவித்தன.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















