நிதிஷ்குமார் வழியில் சரத்பவார்- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்ப வார் இரண்டு தினங்களுக்கு முன்பாக அமித்ஷாவை சந்தித்து பேசியதை அடுத்து மகராஷ்டிரா அரசியல் மட்டுமல்லாம ல் தேசிய அரசியலும் பரபரப்பாகி கொ ண்டு வருகிறது.இந்த நிலையில் சரத்பவார் அமித்ஷாவை மீண்டும் சந்திக்க புனேவுக்கு வருமாறு இன்று அழைப்பு விடுத்து இருக்கிறார்.
இரண்டு தினங்களுக்கு முன் ராகுல் பி ஜேபிக்கு எதிராக எதிர் கட்சிகளை ஒன் றிணைத்து சீன் காட்டிக்கொண்டு இருந்த அதே நேரத்தில் சரத்பவார் அமித்ஷா வை சந்தித்து பேசியது தான் ஆச்சரியமாக இருக்கிறது. ஆக தேர்தலுக்கு முன்பாக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பிஜேபிக்கு எதிராக கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்புகள் இல்லை என்று உறுதியாக கூறலாம்
காங்கிரஸ் கூட்டிய எதிர்கட்சி கூட்டத்தில் பிஜூ ஜனதா தளம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆம்ஆத்மி பகுஜன் சமாஜ் கட்சி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற முக்கியமான எதிர் கட்சிகள் பங்கேற்கவில்லை .இதில் இருந்தே பிஜேபிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையும் காங்கிரஸ் கட்சியினால் ஒன்று திரட்ட முடியாது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இப்போதைய நிலையில் தேசிய அளவில் பிஜேபிக்குஎதிராக ஒரு மாற்று அணியை உருவாக்க இரண்டு அரசியல் தலைவர்களால் மட்டுமே முடியும்.இந்த இரண்டு அர சியல்தலைவர்களால் மட்டுமே பிஜேபி க்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையு ம் இணைக்க முடியும்.
மற்றபடி மம்தா பானர்ஜி ஸ்டாலின் என்று மோடிக்கு எதிராக 2024 லோக்சபா தேர்தலில் யார் கம்பு சுற்றினாலும் 2019 தேர்த லில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஏற்பட்ட கதி மாதிரியே ஏற்பட்டு மாநில அரசியலில்இருந்தும் செல்வாக்கு இழப்பார்கள்.
பிஜேபிக்கு எதிராக மாற்று அணியை உருவாக்க சக்தி உள்ளவர்களில் ஒருவர் நிதிஷ் குமார்.இன்னொருவர் சரத்பவா ர்.நிதிஷ்குமார் 2019 லோக்சபா தேர்தலில் மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளராக எதிர்கட்சிகளால் முன்னிலைப் படு த்த பட்டுவந்த நிலையில் 2017 ல் மீண்டும் பிஜேபிக்கு கூட்டணிக்கு வந்து எதிர்க்க ட்சிகளின் ஆசைகளை குழி தோண்டி மூட வைத்தார்,
2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிஜேபியை எதிர்த்து லாலு மற்றும் காங்கிரஸ் துணையுடன் வெற்றி பெற்ற நிதிஷை தேசிய அரசியலுக்கு தள்ளி விட்டு பீகார் அரசியலை கைப்பற்ற லாலு குடும்பம் போட்ட திட்டத்தை மிக சாமர்த்தியமாக முறியடித்து நிதிஷை பிஜேபி கூட்டணிக்கு 2017 ல் கொண்டு வந்து விட்டார்கள்.
நிதிஷ் நடத்திய கூட்டணி மாற்றங்களி னால் பீகார் மக்களிடை௯9யே ஏற்பட்ட அ திருப்திகளினால் இப்பொழுது முதல்வர் பதவிக்கே லாயக்கில்லை என்கிற நிலைமையை 2020 பீகார் சட்டமன்ற தேர்தலில் பீகார் மக்கள் உருவாக்கி விட்டார்கள்.இதனால் நிதிஷும் தன்னுடைய எல்லையை புரிந்து கொண்டு பிஜேபி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைமைக்கு வந்து விட்டார். இப்பொழுது மத்திய அரசில் நிதிஷ்குமார் கட்சியும் இணைந்து விட்டதால் நிதிஷ்குமாரினால் பிஜேபிக்கு 2024 லோக்சபா தேர்தலில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
இன்னொருவரான சரத்பவாரும் தேசிய அரசியலை மாற்றும் வல்லமை கொண்டவர் தான்.காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சி களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த கூடியவர் தான்.இன்னும் சொல்லப்போனால் இப்போதைய நிலையில் பிஜேபிக்கு எதிராக மாற்று அணியை உருவாக்க சரத்பவாரினால் மட்டுமே முடியும் என்கிறநிலை இருக்கிறது.
அதனால் சரத்பவாரை பிஜேபி கூட்டணிக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் ந நடைபெற்று கொண்டு இருக்கிறது.கேம்சேஞ்சர் ஸ்டேட்ஸ் என்று இரண்டு மாநிலங்களை தான் பிஜேபி நினைக்கிறது. ஒன்று பீகார் இன்னொன்று மகாராஷ்டிரா ஏனென்றால் பீகாரில் 40 லோக்சபா தொகுதிகள் மகராஷ்டிராவில் 48 தொகுதிகள் என்று மொத்தமாக 88 தொகுதிகள் இருக்கிறது. இதில் வலுவான கூட்டணி இல்லையென்றால் பிஜேபிக்கு எதிராக 75 தொகுதிகள் போய் விடும்.
இந்த இரண்டு மாநிலங்களிலும் பிஜேபிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி வலுவாக அமைந்து விட்டால் 2024 லோக்சபா தேர்தலில் எதிர்கட்சிகளின் கை ஓங்கி விடமுடியும். பீகாரை பொறுத்த வரை இனி நிதிஷ்கு மார் ரூட் மாறுவது கஷ்டம் தான். மத்திய அரசிலும் நிதிஷ்குமார் கட்சி அங்கம் வகிப்பதால் நிதிஷ்குமார் பற்றி இனி பயம்வேண்டாம்.
அதனால் சரத்பவாரை பிஜேபி கூட்டணிக்கு கொண்டு வரும் வேலைகள் நடைபெற்று வருகிறது.கடந்த ஆண்டு அகமதாபாத்தில் வைத்து அமித்ஷா சரத்பவார் சந்திப்பு நடைபெற்றது.இதற்கு பிறகு தேவேந்திர பட்னாவிஸ் தேசியவாத காங்கிரஸ் த லைவர்களை தேடிச்சென்று பேசினார்.சரத்பவாரை பொறுத்த வரை தேசியவாத காங்கிரசின் அரசியல் எதிரி என்ப து சிவசேனா தானே தவிர பிஜேபி அல்ல
ஏனென்றால் மராட்டா ரீஜனில் மராட்டிய ர்களின் அடையாளமாக இருக்கும் சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்குமே தவிரபிஜேபி காங்கிரஸ் இடையே அல்ல.சிவசேனாவுடனே இப்பொழுது கூட்டணி ஆட்சியை நடத்திய பிறகு இனி பிஜேபியு டன் சரத்பவார் கூட்டணி வைப்பதால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிர்காலம் நிச்சயமாக பாதிக்கப்படாது.
இதை உணர்ந்து தான் சரத்பவார் பிஜேபி கூட்டணியை நோக்கி செல்கிறார் என்று தெரிகிறது.பிஜேபி மிக தெளிவாக 2019 ல் மோடிக்கு போட்டியாக வர இருந்த நிதிஷை காங்கிரஸ் கூட்டணியில் இருந்து 2017 ல் பிஜேபி கூட்டணிக்கு கொண்டு வந்து காங்கிரசின் 2019 தேர்தல் கனவை காலி செய்தது.
இதோ இப்பொழுது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சரத்பவாரை பிஜேபி கூட்ட ணிக்கு கொண்டு வந்து 2024 தேர்தலிலு ம் காங்கிரசின் கனவை சிதைக்க இரு க்கிறது மோடி அமித்ஷா டீம்.