மத்திய அமைச்சர் அமித் ஷா ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் வழிபாடு !

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் “என் மண், என் மக்கள்” என்ற பெயரில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொள்கிறார். இந்த யாத்திரையை துவக்கும் விதமாக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தார். அமித்ஷா. நேற்று மாலை ராமேஸ்வரத்தில் நடந்த யாத்திரை துவக்க விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் ராமேஸ்வரம் தனியார் விடுதியில் அமித் ஷா தங்கினார்

இந்நிலையில் இன்று காலை 5: 45 மணியளவில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார். கோவிலின் கிழக்கு கோபுர வாயிலில் அமித்ஷாவுக்கு நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அவருக்கு சால்வை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தை பார்வையிட்ட அமைச்சர் அமித் ஷா விஸ்வரூப ஆஞ்சநேயர், 21 தீர்த்தங்கள் உள்ளிட்ட பிற தரிசனங்களை மேற்கொண்டார். அவருடன் தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், சி.டி. ரவி உள்ளிட்டவர்களும் சாமி தரிசனம் செய்தனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version