மாபியாகளை களமிறக்கும் சமாஜ்வாதி:உ.பி.,யில் அமித்ஷா தாக்கு..

உ.பி.,யில் மாபியாக்களை தேடினால் அவர்கள், ஜெயிலில் இருப்பார்கள் அல்லது சமாஜ்வாதியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பார்கள் என பா.ஜ., மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அலிகார்க் மாவட்டம் அட்ரவுலியில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது; உ.பி.,யில் மாபியாக்களை தேடினால், அவர்கள் 3 இடங்களில் இருப்பார்கள். சிறைச்சாலை, உ.பி.,க்கு வெளியே மற்றும் சமாஜ்வாதியின் வேட்பாளர் பட்டியலில் இருப்பார்கள். மாயாவதி மற்றும் அகிலேஷ் ஆட்சி காலத்தில் குண்டர்கள் மக்களை துன்புறுத்தினர்.

மாபியாக்களை பார்த்து போலீசார் பயந்தனர். ஆனால், யோகி ஆட்சியில், அவர்கள் உ.பி.,யை விட்டு வெளியேறி விட்டனர். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version