கடந்த மாதம் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்தது. ஆண்ட்ரே திமுகவினர் தங்களின் அராஜகத்தை கையில் எடுத்தனர். அம்மா உணவகத்தை தாக்கினார்கள். அம்மா மினி கிளினிக்கள் தாக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் நடந்தேறியது. மேலும் தஞ்சாவூரில் திமுகவினரை எதிர்த்து கேள்வி கேட்ட காவலர் இடம் மாற்றப்பட்டார்.
தற்பொழுது அதேபோல் காஞ்சியில் அத்திவரதர் காட்சி கொடுத்த சமயத்தில், காஞ்சிபுரத்தில் கூடிய கூட்டத்தை தொடர்ந்து, மத்திய அரசின் நிதி உதவியோடு, தமிழக சுற்றுலா துறை, அறநிலையத் துறைகள் சேர்ந்து, காஞ்சிபுரம் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்காக பெரிய அளவில் தங்கும் விடுதிகள் கட்ட திட்டமிடப்பட்டது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தில், 20 கோடி ரூபாய் செலவில் ‘யாத்ரி நிவாஸ்’ கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. அங்கேயே பக்தர்கள் வரும் கார்கள், பஸ்களை நிறுத்த பிரமாண்ட வாகன நிறுத்தும் இடம், தகவல் மையம் அமைக்கப்பட்டன. விரைவில் திறக்கப்பட உள்ள யாத்ரி நிவாஸ் கட்டடங்களை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் வந்தார்.
அவரோடு, ஏகாம்பரநாதர் கோவில் செயல் அதிகாரி தியாகராஜன், கலெக்டர் ஆர்த்தி, தி.மு.க.,- – எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் சென்றனர்.
வாகன நிறுத்தும் இடத்தில் பழைய லாரிகள் நிற்பதை பார்த்த எம்.எல்.ஏ., எழிலரசன், ‘டென்ஷன்’ ஆனார். கோவில் அதிகாரி தியாகராஜனைப் பார்த்து, ‘யாருய்யா கோவில் இடத்துல வண்டியை நிறுத்தி இருக்கறது’ன்னு கேட்டு, ‘செருப்பு பிய்ந்து விடும்’ என, ஆவேசமாக கூறினார். இதைக் கேட்ட அமைச்சர் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியாகினர். எம்.எல்.ஏ., ஆக்ரோஷமாக பேசும் ‘வீடியோ’ பதிவு, சமூக வலைதளங்களில் வெளியாகி, அரசு ஊழியர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.