இந்திய வரலாற்றில் முதன் முறையாக கடல் தாண்டி சென்று குற்றவாளியை தூக்கிய அண்ணாமலை !

இந்திய வரலாற்றில் முதன் முறையாக கடல் தாண்டி சென்று குற்றவாளியை தூக்கிய அண்ணாமலை !

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் பன்னஞ்சே ராஜா, பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய நிழல் உலக தாதா பன்னஞ்சே ராஜாவை மொரோக்கோ நாட்டிற்கு சென்று சேசிங் செய்து கைது செய்துள்ளார் முன்னாள் காவல்துறை அதிகாரியும் தற்போது தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை அவர்கள்.

ரியல் எஸ்டேட் துறையில் கர்நாடகா மாநிலத்தையே கன்ட்ரோலில் வைத்திருப்பது முத்தப்பா ராய் தான்.  பெங்களூரு நகரின் முன்னாள் நிழல் உலக தாதா,தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் போன்ற பெரிய டான்களுக்கே குடைச்சல் கொடுத்த படா பெங்களூரு டான். 

அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கொலைகள் என அசால்ட்டாய் ஆட்கள் வைத்து ஏ.டி.எம் மெஷின் போல பணம் கொடுத்தால் ஆட்களை ஸ்கெட்ச் போட்டு ‘செய்யும்’ பலே தாதா. இதனாலேயே ரியல் எஸ்டேட் முதலைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் செல்லப்பிள்ளையாய்க் குறுகிய காலத்திலேயே ஆக்டோபஸாய் பெங்களூருவையே அசாதாரணமாய் வளைத்துவிட்டார் ‘அப்பா’ என செல்லமாக அழைக்கப்படும் முத்தப்பா ராய்.

இந்த காலகட்டத்தில் தான் பன்னஞ்சே ராஜா 1998ல், கொலை வழக்கு ஒன்றில் தொடர்பு கொண்டு, முத்தப்பாராய் கோஷ்டியுடன் தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். பின் சட்டத்திற்கு புறம்பான பல தொழில்களை செய்து தன்னை தாதாவாக அடையாளப்படுத்தி வலம் வந்தான்.

பன்னஞ்சே ராஜா கைது செய்ய பல தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கியது கார்நாடக காவல்துறை. இதனை தொடர்ந்து துபாய்க்கு தப்பியோடிய பன்னஞ்சே ராஜா அங்கு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அதே போன்று, பல்லாரி, மங்களூரு உட்பட, கர்நாடக மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் மாமூல் வசூலிப்பது, தொழிலதிபர்களை மிரட்டுவது, கொலை செய்வது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். துபாயில் இருந்து கொண்டே, தன் கூட்டாளிகள் மூலம், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

மைக்கோ லே – அவுட்டை சேர்ந்த தொழிலதிபரை மிரட்டியது உட்பட, பெங்களூருவில், பன்னஞ்சே ராஜாவுக்கு எதிராக, 11 வழக்குகள் பதிவாகியிருந்தன. அவர் மீது, மங்களூருவில் கலவரத்தை ஏற்படுத்தியது, ஆள் கடத்தல் உட்பட பெரும்பாலான வழக்குகள் உள்ளன. இதுவரை, மாநிலத்தில், 26 வழக்குகள் தொடர்பாக, பன்னஞ்சே ராஜாவை போலீசார் தேடி வந்தனர். கடந்த 1997ல், ரவுடி சீனாவின் கொலை வழக்கு, முன்னாள் நிழல் உலக தாதா ஸ்ரீதரை கொல்ல முயற்சி, பில்டர் சுப்புராஜூ கொலை வழக்கு போன்ற வழக்குகளிலும், பன்னஞ்சே ராஜாவுக்கு தொடர்புள்ளது.

பன்னஞ்சே ராஜாவின் வீடு, உடுப்பி மான்வியில் உள்ளது. கடந்த 2009 அக்டோபரில், அபுதாபியிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம், மலேசியாவுக்கு தப்பி செல்ல முயற்சித்தவரை, விமான நிலையத்தில், துபாய் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து, அவரை கைது செய்து அழைத்துவர, கர்நாடக போலீசார் முயற்சித்தனர். ஆனால், அவர் அங்கிருந்து வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொரோக்கோவுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.தப்பியோடி விட்டதால், அவரை கைது செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

அடுத்த முயற்சியில் 2015 ஆம் ஆண்டு பக்காவாக ஸ்கெச்ட் போட்டது அண்ணாமலை டீம் மொரோக்கோ சென்று அங்குள்ள விமான நிலையத்தில் சேஸிங் செய்து குற்றவாளியை பிடித்து கைது செய்துள்ளார் பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை அவர்கள். மொராக்கோவில் இருந்து நிழல் உலக தாதா பன்னஞ்சே ராஜாவை அழைத்து வந்தது, தப்பியோடிய தாதா மற்றும் அவரது ஆட்கள் முன்வைத்த 18 ஆண்டுகால சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக, இந்தியாவுக்கு வெளியில் இருந்து செயல்பட்டு வந்த குற்றவாளியை மாநில காவல்துறையினர் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்து தண்டனை பெற்று கொடுத்தது இதுவே முதல்முறையாகும்.

Exit mobile version