தமிழகம் முழுவதும் இரண்டு மாதப் பயணத் திட்டம். திட்டத்தில் மாவட்டம் தோறும், கட்சியினருடன் உள் அரங்கச் சந்திப்புகள்.மூத்த காரியகர்த்தாக்கள் வீட்டில் தேனீர் சந்திப்பு.
மாணவர்களுடன் கலந்துரையாடல். “இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்” திட்டத்தின் மூலம் பொதுமக்கள் வீட்டிற்குச் சென்று சந்தித்தல் என்று களமிறங்கியிருக்கிறார் அண்ணாமலை.
இதில் மாணவர்களோடு கலந்துரையாடல் மற்றும் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் திட்டம் வேறு இது போன்று விஷயங்களில் பாஜக இறங்கியுள்ளது மற்ற கட்சிகளுக்கு சற்று நிம்மதியை கெடுத்துள்ளது. இதன் மூலம் மிக பெரிய பலன் பாஜகவிற்கு கொடுக்கப் போகிறது என்பது சர்வ நிச்சியம்.
இதன் எடுத்துக்காட்டாக, இரண்டு நாட்களுக்கு முன்பான மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஒரு மாணவன், “பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார்மயமாக்குவதால் எதிர்கால சந்ததியினர் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறதே?” என்ற கேள்விக்கு அண்ணாமலை கொடுத்த விளக்கம் மிக நேர்மையாகவும் அட்டகாசமாகவும் இருந்தது.
இந்த மாதிரி விளக்கம் கொடுத்தால், மீடியா மாஃபியாக்களின் பித்தலாட்டங்கள் களையப்படுவதுடன், இளைய தலைமுறைகளுக்கு நம்பிக்கையும் உற்சாகத்தையும் கொடுக்கும். ஒரு கட்சியின் சித்தாந்தத்தைக் கொண்டு போய் ஒவ்வொரு மனிதர்களிடமும் சேர்ப்பதை விட, பா.ஜ.கவின் ஆட்சி நிர்வாகத்தின் நோக்கம் வலிமையை சேர்ப்பது தான், அடுத்து தமிழகத்தில் ஆட்சியமைப்பது சாத்தியமாகும். அந்தப் பணியை அண்ணாமலை மிக நேர்த்தியாகத் தொடங்கியிருக்கிறார்.
மேலும் ஒரு ஆட்டோக்காரர் அண்ணாமலை பற்றி பேசும் வீடியோ ஒன்று வெளியானது.அந்த வீடியோவில் அண்ணாமலை பற்றி அந்த ஆட்டோக்காரர் புகழ்ந்து பேசுகிறார். எம்.ஜி. ஆர் அடுத்து அண்ணாமலை தான் என்று புகழ்கிறார்.
இது போன்ற விஷயங்கள் பாஜகவிற்கு புது தெம்பை கொடுத்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















