ராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கோபால்சாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நேற்று பா.ஜ.,வில் இணைந்தார்.
உ.பி., உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பா.ஜ., மேலிடத்தின் பார்வை தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. கட்சியை பலப்படுத்த பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.அ.தி.மு.க., – தி.மு.க.,வில் அதிருப்தியாளர்களை பா.ஜ.,விற்கு இழுக்கும் ஆப்பரேஷனில், தமிழக பா.ஜ., தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம், பெரம்பலுாரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ், அண்ணாமலை ஆகியோரின் முன்னிலையில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கோபால்சாமி, பா.ஜ.,வில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில், சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ., மாநில நிர்வாகிகள் எஸ்.ஆர்.சேகர், சக்கரவர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்
.கடந்த சட்டசபை தேர்தலில், ராஜபாளையம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிட்டதால், கோபால்சாமிக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டது. இதனால், கட்சி பணிகளில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கியிருந்த அவர், தற்போது பா.ஜ.,வில் இணைந்துள்ளார்.
தகவல் தினமலர்.