அண்ணாமலை அட்டாக் அமலாக்கத்துறை என்ட்ரி! செல்வப்பெருந்தகையின் லண்டன் சொத்துக்கு வந்த சிக்கல்!

annamalai SELVAPERUNTHAGAI

annamalai SELVAPERUNTHAGAI

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விவாதத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி அண்ணாமலை பேசக்கூடாது என்று செல்வப் பெருந்தகை தெரிவித்திருந்தார்.இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ‘காங்கிரஸ் கட்சியில் எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் செல்வப் பெருந்தகை குற்றப் பின்னணி கொண்ட ஹிஸ்டரி ஷீட்டர்’ என்று குறிப்பிட்டார் அண்ணாமலை.

பா.ஜ.கவில் ரவுடிகள் சேர்கிறார்கள் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை செல்வப்பெருந்தகை வரலாற்றை சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து வெளி வந்து காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவராக இருக்கிறார் என்றால் அது செல்வப் பெருந்தகை தான்.

செல்வப் பெருந்தகை மீது குண்டாஸ் சட்டம் போட்டது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் இதற்கு இன்று ஆர்.எஸ்.எஸ், மத்திய அரசு காரணம் என்று கூறுகிறார்கள். செல்வப் பெருந்தகையை கோர்ட்டில் சந்திக்க தயார். லண்டனில் நீங்கள் முதலீடு செய்த பணம் எல்லாவற்றையும் நான் வெளியே கொண்டு வர்றேன். எதையும் விட மாட்டேன்” சவால்விட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை லண்டனில் சொத்து வாங்கி வைத்திருப்பதாக அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக, தன் மீதான குற்றச்சாட்டுக்கு உடனே செல்வப்பெருந்தகை பதில் அளிப்பது வழக்கம். ஆனால் அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து மௌனம் காக்கிறார். இதனால் இக்குற்றச்சாட்டு உண்மையோ? என அவரது கட்சியினரிடையே கேள்வி எழுந்துள்ளது.

மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகையில் , நாம் சார்ந்து இருக்கப் போகிறோமா? சுயமாக இருக்கப் போகிறோமா? இன்னும் எத்தனை காலம் சார்ந்தே இருக்கப் போகிறோம்? நமது இயக்கத்திற்கு வரலாறு உண்டு; எவ்வளவு காலம் சார்ந்திருப்போம் என்பதற்கு விடை உங்களிடம் உள்ளது. என திமுக கூட்டணி குறித்து விமர்சித்தார்.

இதனால் தான் தமிழக அரசு அண்ணாமலைக்கு எதிரான விஷயத்தில் செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக செயல்படவில்லை. அதுமட்டுமில்லாமல் எப்போதும் தமிழக செய்தி சேனல்களில் திமுக குறித்து தான் செய்திகள் முதன்மையாக வரும் ஆனால் கடந்த நான்குநாட்களாக தேசிய கட்சிகளின் மாநில தலைவர்கள் குறித்து தான் செய்திகள் வருகிறது. இதை திமுக விரும்பவில்லை

இதனை தொடர்ந்து அண்ணாமலை மீது வழக்கு தொடுப்பதில் தீவிரம் காட்டிவருகிறார் செல்வப்பெருந்தகை. ஆனால் அண்ணாமலை மீது வழக்கு தொடுத்தால் நநம் கோர்ட்டில் உள்ள பழைய வழக்குகள் தூசு தட்டி எடுக்கப்படும் மீண்டும் விசாரணை கோரவாய்ப்புள்ளது இதனால் யோசித்து முடிவெடுப்போம் என செல்வப்பெருந்தகை சட்ட ஆல்சோகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்களாம்.

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த சம்பவங்களை கண்டு கடுப்பில் உள்ளது திமுக. தமிழக அரசியலில் அண்ணாமலையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்சென்றுவிட்டார்கள்.என மேலும் காங்கிரஸ் வளர்வதும் திமுகவுக்கு பிடிக்கவில்லை. திமுக அதிமுக காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் எதிர்க்கும் ஒரே தலைவராக அண்ணாமலை உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர்களான மூத்த நிர்வாகிகள் கண்டன அறிக்கையோ பேட்டியோ கொடுக்கவில்லை.இன்னும் சொல்லப்போனால் செல்வப் பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்படுவார் என்று பேசப்பட்ட சூழலில் அவருடைய கடந்த கால வழக்குகள் பற்றி ஆங்கிலத்தில் நீண்ட கடிதங்களை டெல்லிக்கு தமிழக காங்கிரஸ் புள்ளிகள் சிலர் அனுப்பி வைத்தனர். அந்த கடிதங்களில் இருக்கும் விவரங்களைதான் அண்ணாமலை இப்போது பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து வருகிறார்.

இந்த விஷயங்கள் பற்றி இவ்வளவு விரிவாக அண்ணாமலைக்கு சில காங்கிரஸ் புள்ளிகளே அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்றும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் அதிருப்தியோடு இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பிலும் செல்வப்பெருந்தகைக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி பெரும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

‘லண்டனில் செல்வப்பெருந்தகை முதலீடு செய்த பணம் பற்றிய விஷயத்தை எல்லாம் நான் கொண்டு வருகிறேன். இதுதான் தமிழகத்தின் தலைவிதி என்றால் அதை கையிலெடுக்க நான் தயாராக உள்ளேன். ரிசர்வ் வங்கியில் கடைநிலை ஊழியராக இருந்த செல்வப் பெருந்தகை லண்டனில் என்னவெல்லாம் வாங்கியுள்ளார்? எல்லாவற்றையும் பேசுவோம்’ என்று பேட்டியளித்திருந்தார் அண்ணாமலை.

இந்நிலையில் லண்டனில் செல்வப் பெருந்தகை முதலீடு செய்ததாக கூறப்படுவது பற்றிய முழு விவரங்களைத் திரட்டி அவருக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அண்ணாமலை கோரிக்கை வைத்திருக்கிறார். இதை சுட்டிக் காட்டி செல்வப்பெருந்தகை மீது விரைவில் அமலாக்கத்துறை ஆக்‌ஷன் பாயும் என்கிறார்கள்பா.ஜ.க புள்ளிகள். இதற்கு தேவையான பல விவரங்களை காங்கிரஸ் புள்ளிகளே அண்ணாமலைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்களாம்

Exit mobile version