அன்றே சொன்ன அண்ணாமலை – அமைச்சரிடம் ஆசி கேட்ட காவல்துறை ஆணையர்..!

தமிழக காவல்துறையின் நிலை குறித்து சில மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை செய்த அண்ணாமலை.

தி.மு.க ஆட்சி அமைந்த நாளில் இருந்தே சட்டம், ஒழுங்கு, என்பது தமிழகத்தில் பெரும் கேள்விக்குறியாக மாறி விட்டது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், எம்.எல்.ஏ-க்கள் மீது மக்கள் யாரேனும் புகார் தெரிவித்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல் காவல்துறை மெத்தன போக்கை மேற்கொள்வதை பத்திரிக்கைகள், ஊடகங்களில் வரும் செய்திகள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.

தமிழக காவல்துறை டிஜிபி-யின் கண்ட்ரோலில் இல்லை. தி.மு.க-வை சேர்ந்த நிர்வாகிகள் காவல்துறையினருடன் நெருக்கமாக உள்ளனர் என்று சமீபத்தில் பகீர் தகவலை வெளியிட்டு இருந்தார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இந்த நிலையில் தி.மு.க அமைச்சர் ஒருவரிடம் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ஆசி வேண்டும் என்று கோரிக்கை விடுத்த காணொளி தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டு உண்மை தான் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version