திடிரென டெல்லி பயணம் மேற்கொண்ட அண்ணாமலை அமித்ஷா உடன் சந்திப்பு !

Amitsha,

Amitsha,

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இன்னும் ஒரிரு மாதங்களில் அவர் இங்கிலாந்து சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் 4 மாதங்கள் அரசியல் தொடர்பான படிப்பை படிக்க உள்ளார என தகவல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில், அண்ணாமலை உள்ளிட்ட பாஜக மாநிலத் தலைவர்கள் சிலருடன் கட்சியின் மூத்த தேசியத் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்தப் பயணத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அண்ணாமலை சந்திக்க இருப்பதாகவும், அப்போது அண்ணாமலையுடன் தமிழக பாஜக நிலவரம் மற்றும் மற்ற நிகழ்வுகள் குறித்து அமித்ஷா ஆலோசிக்க இருப்பதாகவும் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version