உங்கள் மாமாவிடம் கேட்க வேண்டியதானே தயாநிதி மாறனை தெறிக்கவிட்ட அண்ணாமலை…

உங்கள் மாமாவிடம் கேட்க வேண்டியதானே தயாநிதி மாறனை தெறிக்கவிட்ட அண்ணாமலை…

திமுக எம்பியும் முன்னாள் அமைச்சருமான தயாநிதி மாறன் தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் கூறிய நிலையில் மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலடி தரும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது T 20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக்கொண்டு இருந்த தயாநிதி மாறன் அவர்கள்… மேகதாது அணை பற்றி கவலைப்பட்டமைக்கு மிக்க நன்றி.

தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு தூது செல்ல நான் தயார் இதை அவர் மாமா மு.க.ஸ்டாலின் அனுமதிப்பாரா?

என தயாநிதிமாறனுக்கு அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முறையில் தரமான பதிலளித்துள்ளார்.

Exit mobile version