பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அவன், இவன் என்று ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்.

பா.ஜ.க தலைவரை ஒருமையில் விமர்சனம் செய்த கைத்தறி அமைச்சர் காந்தி.

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் கே.என் நேரு அவர்கள் பிரபல ஊடகமான தந்தி டிவியில் பேட்டியளிக்கும் பொழுது நெறியாளர் அசோகா உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது கோளாறு அமைச்சர்கள் இருக்கும் பொழுது அவர் வருவதில் என்ன? என்று கே.என்.நேரு பதில் அளித்த காணொளி மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தியிடம் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே அது குறித்து உங்கள் பதில் என்ன? என்று பத்திரிக்கையாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு அமைச்சர் அவனெல்லாம் ஒரு தலைவனா? என்று ஒருமையில் பா.ஜ.க தலைவரை விமர்சனம் செய்து உள்ளார். கே.என். நேரு கூறிய கோளாறு அமைச்சர் இவ்வாறு பொறுப்பில்லாமல் பேசுவது சரியா? என்று நெட்டிசன்கள் அமைச்சரின் பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version