அண்ணாமலை தமிழக இளைஞர்களுக்கு முன்னுதாரணம் வித்யாவீரப்பன் பேட்டி.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பா.ஜ.க-வில் இணைந்திருப்பது குறித்து, வீரப்பனின் மகள் வித்யாவீரப்பன் சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

`அண்ணாமலை சேர்ந்திருப்பது தமிழக பா.ஜ.க-வுக்குப் பலம்’’ என்று வீரப்பனின் மகளும், தமழ்நாடு பா.ஜ.க-வின் மாநில இணைஞரணித் துணைத் தலைவருமான வித்யாவீரப்பன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

கரூரைப் பூர்வீகமாகக்கொண்டவரும், கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி, பின் அந்த பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, பா.ஜ.க-வின் தேசிய தலைமையகத்தில், பாஜக தேசியப் பொதுச் செயலாளர் முரளிதரராவ் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்.

கர்நாடகாவில்பணியாற்றும்போது அந்த மாநில மக்களால்,சிங்கம்’ என அழைக்கப்பட்டவர் அண்ணாமலை.

கடந்த வருடம் தன்னுடைய ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொதுவாழ்வில் நுழைவதாகத் தெரிவித்தார்.

விரைவில் அரசியலில் நுழைவேன்’ என, கடந்த சில மாதங்களாகத் தெரிவித்துவந்தார்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்.

அண்ணாமலை ஐ.பி.எஸ் இணைவுக்கு பா.ஜ.க தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை அண்ணாமலைக்குத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், தமிழக பா.ஜ.க-வின் இளைஞரணித் துணைத் தலைவராக, பொறுப்பு வகித்துவரும் வீரப்பனின் மகள் வித்யாராணி இது குறித்துப் பேசினார்.

`ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி, நேர்மையான சில காரணங்களுக்காக அதிலிருந்து விலகி இன்று கட்சிப் பணியில் இணைந்திருக்கிறார்.

நான் அவரின் பேட்டிகளை பலவற்றைப் பார்த்திருக்கிறேன். அவற்றில், இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான உற்சாகம் மற்றும் புத்துணர்வுஅவரிடம் நிறைய இருக்கின்றன.

`மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்’ என்கிற என்னம் அவரது பேச்சிலும் செயலிலும் தெரிகிறது . அதை நான் வரவேற்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சியில் அவர் இணைந்திருப்பதை கட்சியின் பலமாகப் பார்க்கிறேன்.

அவருடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வமாக இருக்கிறேன்” என்கிறார் வீரப்பன் மகளும் பாஜக மாநில இளைஞரணி துணை தலைவர் வித்யாராணி.

Exit mobile version