அண்ணாமலை மாரிதாஸ் சந்திப்பு! தமிழக பா.ஜ.க அடுத்த அதிரடிக்கு தயாராகிறதா!

மாரிதாஸ் பா.ஜ.கவில் இணையப்போவதாகத் தொடர் செய்திகள் வந்த நிலையில் நேற்று மதுரை சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மாரிதாஸ் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மாரிதாஸ் அரசியல் வருகிறாரா? என்றால் ஆம் அதற்கான மேல்மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. தேதி முடிவாகவில்லை , முழுமையான முடிவும் இன்னும் எட்டப்படவில்லை என்பது தன் உண்மை. தற்போதைய நிலவரம் என்கிறார்கள் மாரிதாஸ் ஆதரவாளர்கள்.

அண்ணாமலை மாரிதாஸ் இருவரும் கூடித் தெளிவான முடிவுக்கு வருவது முக்கியம் என்று மேல்மட்ட தலைவர்கள் நினைக்கிறார்கள். மேலும் ரஜினி அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டதால் மாரிதாஸ் தீவிர மோடி ஆதரவாளர் என்பதாலும் விரைவில் பாஜகவில் இணைய வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

மாரிதாஸ் தன் சமூக வளைத்தளத்தில் வலது சாரி ஆதரவாளர்களை ஒருங்கிணைத்தவர் என்று கூட கூறலாம்.. அவரின் வீடியோக்கள் அனைத்தும் அனைத்து மட்டத்திலும் பரவியது. ரஜினி ரசிகர்கள் மாரிதாஸ் ஆதரவாளர்கள் என மாறினார்கள்.

தற்போது தமிழக இளைஞர்கள் சமூகவலைத்தள பேச்சுக்களை அப்படியே நம்பி விடுகிறார்கள். பிவினைப்பேசும் இளைஞர்களாக தமிழகத்தில் மாறிவருகிறார்கள்.

திருமுருகன் காந்தி, சீமான், கம்யூனிஸ்ட், உதயநிதி என பல அரசியல் தலைவர்கள் இளைஞர்களின் மத்தியில் பல பொய்களை கூறி பிரிவினைவாதம் எனும் விஷமத்தை பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை உடைக்க பாஜக மற்றும் தேசிய உணர்வுள்ள கட்சிகளில் அதிக அளவில் பேச்சளர்கள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. தற்போது பா.ஜ.கவில் அண்ணாமலை எனும் இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டு உள்ளது. இதனால் இளைஞர்கள் பா.ஜ.கவினை திரும்பி பார்க்கிறார்கள்.

இந்த நேரத்தை விட்டால் இனி வேறு நேரம் தமிழக பா.ஜ.கவிற்கு கிடைக்காது என்பதால் அடுத்ததத்த கட்ட நகர்விற்கு செல்கிறது அதுதான் மாரிதாஸ் இணைப்பு என்கிறார்கள்.

பாஜகவை வலுப்படுத்த அடிப்படைவாதிகள் அல்லாமல் இளைஞர்கள் ஏற்கும் விதமான நகர்வு இருக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் அந்த அந்த பகுதியில் உள்ள திமுக முக்கிய பிரமுகரை எதிர்த்து உள்ளூர் அரசியலில் தீவிரமாகச் செயலாற்றுவதும் திமுகவிற்கு மாற்று பாஜக என்ற நிலைக்கு உயர்த்துவதுமே முக்கியப்பணி.

எனவே ஸ்டாலின் , திமுக என்று மேல்மட்ட எதிர்ப்பு தாண்டி அந்த அந்த பகுதி மக்களுக்கான தீவிர அரசியல் போராட்டங்களை திமுகவிற்கு எதிராக நடத்த வேண்டும். என அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது தமிழக பாஜக.

கிடைக்கும் தகவல்படி பாஜக வின் தலைவர்களளோடு கலந்துரையாடிய பின் தமிழகக பாஜகவில் உரியப் இணையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.மாரிதாஸ் அரசியல் உள்ளே வருவது மேல்மட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது மட்டுமே உண்மை.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version