அரசியலில் அனல் பறக்க ! மீண்டும் துவங்கிய அண்ணாமலை பாதயாத்திரை !

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில், ‘என் மண், என் மக்கள்’ என்ற பாத யாத்திரை நடத்தி வருகிறார்.இதில் இரண்டாம் கட்ட பாத யாத்திரை, தென்காசி மாவட்டம், பொட்டல்புதுார் தீப அலங்கார திடலில் இருந்து துவங்கியது.

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் துவங்கிய, பாதயாத்திரையில், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். முன்னதாக, பொட் டல்புதுார் வந்த அண்ணாமலையை, மகளிரணி நிர்வாகிகள், துாய்மை பணியாளர்கள் மலர் துாவி வரவேற்றனர்.

செண்டை மேளம் முழங்க வரவேற்றனர். அருளிசை பாடகர் சிவச்சந்திரன் அன்பு கொடிமக்களுடன், அண்ணாமலைக்கு தலைப்பாகை அணிவித்து திருமண் நாமம் இட்டு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.திருமலையப்பபுரம் பஸ் நிலையம் அருகே வரவேற்பு அளிக்க கூடி நின்ற பெண்களிடம் அண்ணாமலை, சமையல் காஸ் விலை 200 ரூபாய் குறைத்தது குறித்து கேட்டார்.

பெண்கள் மகிழ்ச்சி என்றும், மேலும் விலை குறைத்தால் மிக்க மகிழ்ச்சி என்றும் கூறினர்.பின், கடையம் ஊர்முகப்பில் பா.ஜ.வினர் சிறப்பான வரவேற்பளித்தனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version