பாமகவுடன் கூட்டணி கையெழுத்து ஆனவுடன் அண்ணாமலை சொன்னது இதுதான் !

பாமக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பின்பு தைலாபுரம் தோட்டத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தேளரை சந்தித்து பேட்டி அளித்தார் அப்பொழுது அவர் கூறியது:-10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாமக உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு.நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாமக எதிர்கொள்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெறும்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்று அரசியலை கொண்டுவர துடித்துக் கொண்டிருப்பவர்.

மக்களை நம்பி வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம்.தமிழகத்தின் அரசியல் நேற்றிரவில் இருந்து மாறியுள்ளது.ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் ராமதாஸ், அன்புமணி பங்கேற்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

பாமகவுடன் கூட்டணி கையெழுத்து ஆனவுடன் அண்ணாமலை சொன்னது இதுதான் ANNAMALAI BJP PMK
FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version