தலைச்சிறந்த ஐ.பி.எஸ். அதிகாரி, கர்நாடகா சிங்கம் என பெயர் பெற்ற அண்ணாமலை,காவல் ஆய்வாளரை விரலை நீட்டி எச்சரித்த பரபரப்பை ஏற்படுத்துள்ளது.கேரள அரசின் செயல்பாட்டால் தேனி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர். இதனை தங்களுக்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்ட அதிமுக, பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தமிழ்நாடு அரசை கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ளன.
முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக நவம்பர் 8ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறிவித்தார்.அதன்படி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்துவதற்கு முன்னாள்.
தேனியில் நடைபெறும் முல்லைப் பெரியாறு மீட்பு போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் வழியில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.கே.மூக்கையாத் தேவர் சிலைகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாலை அணிவிக்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து காரை விட்டு இறங்கிய அண்ணாமலையை, உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் முன் அனுமதி பெறவில்லை என அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. பின்பு மீண்டும் காரில் ஏறி புறப்பட தயாரான நிலையில், கட்சி நிர்வாகிகள் அவரை கண்டிப்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில், காரை விட்டு இறங்கிய அண்ணாமலை இன்ஸ்பெக்டரை பார்த்து ஒரு விரல் காட்டி என் கட்சிக்காரரை மிரட்டாதீர்கள் என எச்சரித்து விட்டு தேவர் சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டும் தொனியில் ஒருவிரல் காட்டி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் IPS அதிகாரியான அண்ணாமலை காவல்துறையை சேர்ந்தவர்களை மிரட்டலாமா என்று எதிரிக்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.ஆனால் அதே வேலையில் அண்ணாமலையின் சமீபத்திய செயல்பாடுகள் பாஜகவினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழக எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழக மக்களுக்கு சொந்தமானது. அப்படி இருக்கும்போது கேரளாவில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் வைத்திருப்பது தமிழகத்திலிருந்து யாருக்கும் அந்த செல்லவில்லை தமிழக மக்களுக்கான உரிமையை கேரள அரசிடம் மண்டியிட்டு தாரை வார்த்து உள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சரணடைந்துள்ளார்.அணையின் பாதுகாப்பானதே மிகவும் உலகத்திலேயே சிறந்த அணியாக உள்ளது எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.திமுக அரசு உடனடியாக தமிழக மக்கள் மற்றும் 5 மாவட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அனைவருடைய கொள் அளவினை உயர்த்த முயற்சி எடுக்க வேண்டும் என்றும்.
முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது ஒரு காமெடி நடிகர் போல் நடந்து கொள்கிறார் முதல்வர் பேபி அணையில் 10 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார் ஆனால் கேரள அரசோ கேரள முதல்வரும் அதுபோல் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என தெரிவிக்கின்றனர். ஸ்டாலினுக்கு ஏனிந்த வேலை.
திமுக ஆட்சியில் என்னதான் செய்தார்கள்?
“கருணாநிதி முதல்வராக இருந்தபோதும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சென்னை வெள்ளத்தில் நடந்தார். ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோதும், சென்னை வெள்ளத்தில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நடந்தார். இப்போது முதல்வராகவும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சென்னை வெள்ளத்தில் நடக்கிறார். அப்படியானால் திமுக ஆட்சியில் என்னதான் செய்தார்கள்?”
உங்க பருப்பு இனி வேகாது மீண்டும் Suntv கலைஞர் TV நிருபர்களை பங்கம் செய்த அண்ணாமலை. தமிழக முதல்வர் மற்றும் திமுக நிர்வாகிகள் இடையே உங்களால் கேள்வி கேட்க முடியுமா கோபாலபுரத்தில் விசுவாசமாக இருக்கும் நீங்கள் ஒரு நேர்மையான உண்மையான செய்தியாளராக இருந்தால் கேட்க உங்களுக்கு திராணி இருக்கிறதா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அனல்பறக்கும் கேள்விகளை நிருபர்கள் இடையே மீண்டும் கேட்டார்.
இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை மீட்கக்கோரியும், தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளை கண்டித்து பா.ஜ.க. நடத்திய போராட்டம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உரிய அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் செய்ததாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் 850 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.