அண்ணாமலை போட்ட போடு… ஒரே இரவில் நடந்த தலைகீழ் மாற்றம்.. திமுகவுக்கு மேயர் பிரியா கொடுத்த அதிர்ச்சி..

AnnamalaiVsStalin

AnnamalaiVsStalin

காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 356 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் விடப்பட்டது. இதற்குபாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.. அம்மா உணவகங்களை குறிப்பிட்டும் அதில் பணி புரிபவர்கள் நலன் கருதி அண்ணாமலை கண்டனத்தை பதிவு செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் சென்னையில் உள்ள சுமார் 350-க்கும் அதிகமான பள்ளிகளில், 65,000-க்கும் அதிகமான மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்துக்குகு, அம்மா உணவகங்களில் உணவு தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம், அம்மா உணவகங்களில் பணிபுரிவோருக்கு, நிலையான வருமானம் கிடைக்கப்பெற்று வந்தது.கடந்த 2023-ம் ஆண்டு, காலை உணவுத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முயன்றபோது, மாமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், அந்த முடிவைக் கைவிட்டனர். தற்போது, மீண்டும் தனியாருக்குத் தாரைவார்க்க, ஒப்பந்தம் கோரி இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்தது திமுக அரசு. அப்படி மேம்படுத்தப்பட்ட அம்மா உணவகங்களில், பள்ளி மாணவர்களுக்கான உணவை தயாரிக்காமல், தனியாருக்குத் தாரைவார்க்க இரண்டு ஆண்டுகளாக முயற்சிப்பது ஏன்?கண்துடைப்புக்காகத் திட்டங்கள் அறிவிப்பது அல்லது தங்கள் லாப நோக்கங்களுக்காகத் திட்டங்களை மடைமாற்றுவது என, நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தொடர்ந்து அம்மா உணவகங்களிலேயே, காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்றும், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிப்பதை கைவிட வேண்டும் என்றும், சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கண்டனத்தை பதிவு செய்தார்.

இந்த சூழலில் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலும் அண்ணாமலையின் அறிக்கையை சுட்டி காட்டி மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்து மேயர் ப்ரியா உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் 356 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 49 ஆயிரத்து 147 குழந்தைகள் பயன்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் வெளி நிறுவனத்தின் வாயிலாக காலை உணவு சமைத்து பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கோரும் பணி ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சென்னையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு உணவு சமைத்து வழங்கும் பணியை சென்னை மாநகராட்சியே தொடர்ந்து மேற்கொள்ளும்” என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து ஆதாரங்களோடு மக்கள் மேடையில் வைத்து வருகிறார். அண்ணாமலை பேசினால் அது தமிழகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. பல அண்ணாமலை சொன்ன பிறகு பல விஷயங்களில் பின்வாங்கியுள்ளது திமுக அரசு.

Exit mobile version