போலி செய்தி பரப்பிய 200 ரூபாய் உ.பிகளை வீடியோ வெளியிட்டு பங்கம் செய்தார் அண்ணாமலை!

Annamalai Tweet

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பெண்ணை மிரட்டி பேசுகின்றார் என்று திமுகவினர் பொய் செய்திகளை சமூகவலைதளங்களில் ப பரப்பி வந்த நிலையில் அண்ணாமலை பொய் செய்தி பரப்பிய திமுகவினரை வீடியோ போட்டு உண்மையினை தெரிந்து கொள்ளுங்கள் என வீடியோ வெளியிட்டு 200 ரூபாய் சம்பளம் வாங்கும் திமுகவினரையும் சம்பளம் கொடுக்கும் அறிவாலய நாடக கம்பெனி என திமுகவை வச்சு செய்துள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கி வருகிறது தமிழக பாஜக குறிப்பாக சென்னையில்பாஜக நிர்வாகிகளை நிவாரண பணிகளில் ஈடுபட முடுக்கி விட்டார் அண்ணாமலை அவர்கள். மேலும் தமிழக பா.ஜ.க தலைவர் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கும்போது சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

ஒரு புகைப்படத்தில், அண்ணாமலை ஒரு பெண்ணிடம் கை நீட்டி பேசுவதுபோல் இருந்தது. அதன்பிறகு, அண்ணாமலை பெண்ணை மிரட்டி பேசுகின்றார் என்று திமுகவினர் பொய் செய்திகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலை வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பெண்ணை கை நீட்டி மிரட்டுவது போல வெளியான புகைப்படத்திற்கும் திமுகவினர் பரப்பிய பொய் செய்திக்கும் விளக்கமளித்து, திமுக மற்றும் திமுக உடன்பிறப்புகளை சம்பவம் செய்துள்ளார் அண்ணாமலை. இதுகுறித்து அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், 200 ரூபாய் சம்பளம் கொடுக்கும் அறிவாலய நாடக கம்பெனி, மோசமான ஊதியம் பெறும் சில கலைஞர்களால் வழிநடத்தப்படுகிறது.

எப்போதும் போல் செயல்படவில்லை.1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாடக நிறுவனம் ஒரு அரசியல் கட்சியாக எவ்வாறு செயல்படுகிறது. இப்போது ஆட்சியில் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள இணைக்கப்பட்டுள்ள வீடியோவை (அடுத்த ட்வீட்டில்) பார்க்கவும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

அடுத்த ட்விட்டில், என்னவென்று புரிந்துகொள்ள இந்த வீடியோவை இங்கே பாருங்கள் குறிப்பிட்ட அண்ணாமலை, பாஜகவுக்கு எதிராக உள்ள 200 ரூபாய்க்கு வேலை செய்யும் மோசடிக்காரர்களும், சூட் & பேண்ட் அணிந்து கொண்டு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் சில பெரிய மோசடிக்காரர்களும் தான் என்று பதிவிட்டுள்ளார்

Exit mobile version