ஜனவரி 26 குடியரசு தினம் சுதந்திர தினமல்ல! ஸ்டாலினை பங்கம் செய்த அண்ணாமலை! விடியல் அரசுக்கு அறிவுரை!

குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்தி எப்போதும் நடைபெறும் நடைமுறையை பிரச்சனையாக கிளப்பியுள்ளது திமுக அரசு. தரமற்ற பொங்கல் தொகுப்பு, ஜீ தமிழ் விவகாரம் காவல்துறை அராஜகம், என ரவுடிகளின் அட்டகாசம் என தமிழகம் சீரழிந்து வருகிறது. இதையெல்லாம் மறைப்பதற்காக மொழி மாநிலம் புறக்கணிப்பு என்ற நாடகத்தை நடத்தி வருகிறது.

குடியரசு தின விழாவில் தமிழக ஊர்தி பங்கு பெறாததால் அது தமிழகத்தில் குடியரசு விழாவில் பங்கு பெரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஜனவரி 26 குடியரசு தினம் சுதந்திர தினமல்ல! அதை மறக்காமல் குடியரசு தினத்தன்று ஊர்வலத்துக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று திமுக அரசுக்கு அண்ணாமலைஅறிவுரை வழங்கியுள்ளார்.

பாஜக தலைவர் இது குறித்து குறிப்பிட்டள்ளதாவது:

தமிழகம், கேரளா, மேற்கு வங்க மாநிலங்களின் அரசுகள், அரசியலை வியாபாரமாக வைத்து பிழைப்பவை. பொய்யை மூலதனமாக வைத்து பொய்யை பரப்பு கின்றன.

தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பொய் சொல்வதில் வல்லவர்கள். மத்திய அரசு, குடியரசு தின அணிவகுப்பிற்கு தமிழகத்தில் இருந்து சென்ற அலங்கார ஊர்தியை நிராகரித்து இருப்பதாக பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது, பாதுகாப்பு துறையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவால் முடிவு எடுக்கக் கூடியது.

அனைத்து மாநிலங்களையும், குடியரசு தின ஊர்தி அணிவகுப்பில் இடம்பெற செய்ய முடியாது. இடநெருக்கடி, பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவற்றை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் சில மாநிலங்களுக்கு தான் வாய்ப்புகள் வழங்கப்படும்.

மோடி அரசு வந்த பின், தமிழக அலங்கார ஊர்திகள், 2021, 2020, 2019 என மூன்று ஆண்டுகள் தொடர்ந்து குடியரசு அணிவகுப்பில் இடம்பெற வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு கடந்த, 2021ல் தமிழக ஊர்தியில் மாமல்லபுர சிற்ப கலை, 2020ல் அய்யனார் சிலை, 2019ல் காந்தியின் 150வது பிறந்த நாளை கோலாகலமாக காட்டினோம்.

மேலும், 2017, 2016ம் ஆண்டிலும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமர் மோடி அரசு வந்த பின் தான், தமிழகத்திற்கு ஐந்து முறை வாய்ப்பு கிடைத்தது. வேறு எந்த மாநிலத்திற்கும் இவ்வளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு, தமிழகம் வழங்கிய, ‘கான்செப்ட்டை’ நிபுணர் குழு பரிசீலித்தது.

அவர்கள் எடுத்த முடிவு அடிப்படையில், இந்த முறை தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது, வருத்தப்பட கூடிய விஷயம். வீரமங்கை வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியார் ஆகியோருக்கு, மத்திய அரசு மரியாதை கொடுக்கவில்லை என்று கூறுவது சுத்த பொய். மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் ஆகிய மூன்று மாநில அரசுகளும், அரசியலை வியாபாரமாக வைத்து கொண்டு பிழைப்பவை.

குடியரசு தினத்தன்று ஊர்வலத்துக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று திமுக அரசுக்கு அண்ணாமலை அறிவுரை

1, பாரதியார் தேசியவாதி. அதற்குத் தக்க அவரது Tableau அமையவேண்டும்.

2, வீரமங்கை வேலுநாச்சியார் & குயிலி – சமூகத்தின் எந்த தரப்பிலிருந்தும் வரலாம், ஒரு குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்று காட்டியவர்கள். அது உங்கள் அரசியல் நிலைப்பாட்டின் கவனத்தில் கொள்க.

3, வ.உ சிதம்பரம் பிள்ளை தேசியவாதி, ஆன்மிகவாதி. எப்போதும் பிரிவினைவாதம் பேசாதவர். ஶ்ரீ ராமகிருஷ்ணரோடு அவருடைய தொடர்பையும் மறவாமல் காட்டுங்கள்.

4, கடைசியாக… 1967 முதல் திமுக ஆட்சி வந்ததிலிருந்து பாடப்புத்தகங்களில் செய்த வரலாற்று திரிபுகளை திருத்தவும். அதோடு.. ஜனவரி 26 குடியரசு தினம். சுதந்திர தினமல்ல. என்பதையும் நினைவில் கொள்க! என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

Exit mobile version