டிஜிபி-க்கு ஆதரவு தெரிவிக்க ஒரு தகுதி வேண்டும் சேகர்பாபுவிற்கு – அண்ணாமலை பதிலடி..!

சட்டம், ஒழுங்கு, குறித்தும் தமிழக காவல்துறை உயர் அதிகாரி டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் செயல்படாடுகள் குறித்தும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்பு கடும் விமர்சனத்தை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வெளிப்படுத்தி இருந்தார். டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை என்று அண்ணாமலை தெரிவித்த கருத்து தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி இருந்தது.

இதனை தொடர்ந்து ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு ஆதரவாகவும், பா.ஜ.க தலைவர் குறித்து விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது அமைச்சர் சேகர் பாபுவின் பழைய வரலாறு குறித்தும், அவரின் எதிர்காலம் எப்படி? இருந்தது என்பதை பற்றியும் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version