Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

கச்சத்தீவு வைத்து அடுத்த நாடகத்தை தொடங்கி ஸ்டாலின் புட்டு புட்டு வைத்த அண்ணாமலை

Oredesam by Oredesam
April 2, 2025
in அரசியல்
0
இரண்டு திராவிட கட்சிகளை அகற்றவே என்னை தலைவராக நியமித்துள்ளனர் அண்ணாமலை ஆவேசம்.
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .அதில்,சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள், அதிகரித்து வரும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகள் என, தமிழகம் இதுவரை இல்லாத மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அவரது இன்றைய நாடகம், கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்.

கடந்த இருபது ஆண்டுகளில், இலங்கை அரசால், ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்குக் காரணம், இன்றைய முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களின் தந்தை மறைந்த கருணாநிதி அவர்கள், கடந்த 1974 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் சேர்ந்து, கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக் கொடுத்ததுதான்.

READ ALSO

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த இந்திரா காந்தி அவர்களின் ராஜதந்திரம் என்று கூறினார் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை. தமிழக மீனவ மக்களுக்குச் செய்த துரோகம், உங்களுக்கு ராஜதந்திரமா?

காங்கிரஸுடன் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த பிறகு, பல முறை, மத்திய அரசில், பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் கள்ள மௌனம் மட்டுமே சாதித்துக் கொண்டிருந்தது திமுக. கடந்த நாற்பது ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது, கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக? இலங்கைப் போரின்போது, திமுக நடத்திய மூன்று மணி நேர உண்ணாவிரதம் உள்ளிட்ட கபட நாடகங்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்று திரு.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை ராணுவத்தால், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, மத்திய அமைச்சர்களாக இருந்து ஊழல் செய்வதில் மட்டுமே மும்முரமாக இருந்த திமுக, தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நம் கண்முன்னே கண்ட வரலாறு.

கடந்த 2014 ஆம் ஆண்டு, இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போது, அவர்களை பத்திரமாக மீட்டது நமது பாரதப் பிரதமர் திரு
@narendramodi
அரசு. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு
@narendramodi
அவர்கள் பிரதமர் பொறுப்பேற்ற பிறகு, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள். அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல், சட்டப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பாரத நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது.

கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, ஐம்பது ஆண்டுகள் மௌனமாக இருந்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு மீட்போம் என்று கபட நாடகம் ஆடும் திரு. ஸ்டாலின் அவர்களையோ, திமுக காங்கிரஸ் கூட்டணியையோ, பொதுமக்கள் நம்பப் போவதில்லை.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
அரசியல்

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

March 23, 2026
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
அரசியல்

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

March 14, 2026
TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

13 வயது மாணவி வைஷ்ணவி  தற்கொலை! குன்றத்தூர் அருகே நடந்த சோக சம்பவம்!

13 வயது மாணவி வைஷ்ணவி தற்கொலை! குன்றத்தூர் அருகே நடந்த சோக சம்பவம்!

January 24, 2022
விமான நிலையத்தில் சல்மான் கானை தடுத்த பாதுகாப்பு படை வீரர்!  வீரருக்கு வெகுமதி அளித்த சி.ஐ.எஸ்.எப்.வைரல் வீடியோ!

விமான நிலையத்தில் சல்மான் கானை தடுத்த பாதுகாப்பு படை வீரர்! வீரருக்கு வெகுமதி அளித்த சி.ஐ.எஸ்.எப்.வைரல் வீடியோ!

August 26, 2021
கேஸ் விலை உயர்வு ஹோட்டல்காரரிடம் மைக்கை நீட்டிய நிருபர்! நினைத்து ஒன்று நடந்தது ஒன்று! வேற லெவல் சம்பவம்! வைரல் வீடியோ!

கேஸ் விலை உயர்வு ஹோட்டல்காரரிடம் மைக்கை நீட்டிய நிருபர்! நினைத்து ஒன்று நடந்தது ஒன்று! வேற லெவல் சம்பவம்! வைரல் வீடியோ!

November 7, 2021
அண்ணாமலையை மாற்றிய தென்னிந்திய அயோத்தியா ?

அண்ணாமலையை மாற்றிய தென்னிந்திய அயோத்தியா ?

October 31, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x