தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து திமுகவின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளார். இதில் எல்லாம் தி.மு.க செய்த ஆட்டூழியங்கள். திமுகவின் இரட்டை நிலைப்பாடு ஆகிவற்றை தோலுரித்து காட்டியுள்ளார். ஆனால் இந்த முறை சம்பவம் வரப்போகும் ஊழலை சுட்டி காட்டியுள்ளார் அண்ணாமலை
தி.மு.க அரசு மின் வாரியத்தில் ஊழல் செய்யப்போகிறது என தெரிந்து கொண்டு அதைப்பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பது புது விதமாக இருக்கிற துவழக்கமாக ஆளும் கட்சியை ஊழலில் சிக்க வைத்து விட்டுஅதை வைத்து அர சியல் செய்வது தான் தமிழக அரசியலில்எதிர்க்கட்சியின் வேலையாக இதுவரை
இருந்து வருகிறது.
ஆனால் அண்ணாமலை திமுகவினர் மின் வாரியத்தில் திருடப்போகும் முன்பே ஏம்ப்பா திருட கிளம்பி விட்டிர்களா என்று அவர்க ளை எச்சரிக்கை செய்து இருக்கிறார் அண்ணாமலை. அவர் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் மின் வாரியதை பற்றி முக்கிய தகவலை பகிர்ந்தார்.
முக்கியமான எனர்ஜி கம்பெனியிடம் மின்வாரியம் மின்சாரம் வாங்க போகிறது இதற்கான நடவடிக்கைகளை தி.மு.க அரசு மேற்கொண்டுள்ளது. அந்த எனர்ஜி கம்பெனி தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. அந்த கம்பெனியை திமுகவை சேர்ந்த ஒருவர் வாங்க உள்ளார். அந்த கம்பெனியிடம் மின்வாரியம் 4000 கோடி முதல் 5000 கோடி வரை ஒப்பந்தம் போடுவதற்கு பேரம் பேசி வருகிறார்கள்.
அந்த கம்பெனி திமுகவிடம் வந்த பிறகு 1 யூனிட் மின்சாரம் 20 ரூபாய் என்ற அளவில் திமுக அரசு வாங்க போகிறது. அதன் பின் மின்மிகை மாநிலம் என்று மார்தட்டி அதில் நடைபெற்ற ஊழல்களை மறைக்க சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் எனில் இதற்கான ஆதரங்களை ஒவ்வொன்றாக வெளிவரும். மின்சாரத்துறை மின்துறை அதிகர்களுக்கும் இதை நாங்கள் எச்சரிக்கை செய்தியாகவே கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் என திமுகவை சம்பவம் செய்தார் அண்ணாமலை!